வெள்ளி, 2 டிசம்பர், 2022

வாழைப்பழம் தின்றபின் தூக்கி எறியாதீர் அதன் தோலை!

‘வாழைப்பழம் உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது; நல்ல மனநிலையில் இருக்கப் பெரிதும் துணைபுரிகிறது; நரம்புகளைச்  சீராக வைத்துக்கொள்ளப் பயன்படுகிறது’ என்றிப்படி வாழைப் பழத்தின் பயன்கள் மிகப் பல என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால், இதன் தோலால் நாம் பெறும் நன்மைகள் சில உள்ளன என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

தெரிந்துகொள்ள வாசிப்பைத் தொடருங்கள்.

*’மரு’ நீங்கிட.....

தூங்கச் செல்லும் முன் வாழைப்பழத் தோலை மருவின் மீது வைத்துச் சிறு கட்டு போடுங்கள். ஒரு வாரத்திற்கு இதைச் செய்தால் போதும். மருக்கள் தாமாக விழுந்துவிடும். இந்த எளிய மருத்துவம் முற்றிலும் வலியற்றது!


*முகச் சுருக்கம் மறைய.....


வாழைப்பழத் தோலை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் காத்திருந்து கழுவிவிடுங்கள். சில நாட்களுக்கு இதைச் செய்தால் படிப்படியாக முகச் சுருக்கங்கள் மறையும்.


*பருக்கள் ஒழிய.....


பருக்களுக்கு எதிரான போராட்டத்தில் வாழைப்பழத் தோல் இளசுகளுக்குப் பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழத் தோலின் உட்பக்கத்தைப் பருக்களின் மீது வைத்து மெதுவாகத் தேயுங்கள். குறைந்தது இரண்டு மணிநேரம் செய்யுங்கள். தேய்த்த இடங்களைக் கழுவிட வேண்டாம். தினமும் இப்படிச் செய்திடுக. சில நாட்களில் பலன் தெரியும்.


*காயம் குணமாக.....


இதற்கும், பருக்களை ஒழிப்பதற்குச் செய்தது போலவே, வாழைப்பழத் தோலின் உட்புறத்தை காயத்தின் மேல் பத்து முதல் முப்பது நிமிடங்கள் வரை தேயுங்கள். காயத்தின் மீது கட்டுப்போடுங்கள். இரவு முழுதும் கட்டைப் பிரிக்கக் கூடாது. காயம் விரைவில் குணமாகும்.


பற்கள் பளீரிட.....


வாழைப்பழத் தோலின் உட்புறத்தை[தோலிலிருந்து சுரண்டி எடுக்காமல்]ப் பற்களில் வைத்து அழுத்தித் தேயுங்கள். உள்ளே இருக்கும் ஊண் பகுதி தேய்க்கப்பட்டு மறையும்வரை தேய்த்திடுக.


சுமார் பத்து நிமிடங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். பிறகு, உலர்ந்த தூரிகையால்[brush] மூன்று நிமிடங்களுக்கு வட்ட இயக்கத்தில் பல் துலக்குதல் வேண்டும். தினமும் இப்படிச் செய்துவந்தால் பற்கள் பளீரிடுவதைக் காணலாம்.


***இனியும் வாழைப்பழத்தில் உள்ளே இருக்கும் பழத்தை மட்டும் விழுங்கிவிட்டுத் தோலைத் தூக்கி எறியமாட்டீர்கள்தானே?!

===============================================================================

https://ww2.goodtoknowthis.com/health/banana-peel-on-your-skin/2/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக