சனி, 17 டிசம்பர், 2022

சிக்குவாரா ஜக்கி?!?!?

‘அமைச்சரின் இலாகாவைப் பறித்த ஜக்கி’ என்று தலைப்பிட்டுக் கீழ்வரும் சுவையானதொரு செய்தியை வெளியிட்டுள்ளது ‘நக்கீரன்’ இதழ்[17.12.2022].

//வனத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்திருக்கும் ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மீது தொடர்ந்து புகார்கள் வெடித்தபடியே உள்ளன.

ஜக்கி பல புகார்களுக்கு உள்ளான நிலையிலும், வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் அவருடன் மிகுந்த நெருக்கம் பாராட்டிவந்தார். இதை நக்கீரன் உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ஜக்கியுடன் ராமச்சந்திரன் உறவாடியது குறித்து மேலிடத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அமைச்சரோ அதை அலட்சியப்படுத்தியதாகத் தெரிகிறது.

இவரின் இந்த அலட்சியம் காரணமாக இவரிடம் இருந்த வனத்துறைப் பொறுப்பைப் பறித்து அமைச்சர் மதிவேந்தனிடம் ஒப்படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதிவேந்தனிடம் இருந்த சுற்றுலாத்துறை ராமச்சந்திரனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

வனத்துறை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் ராமச்சந்திரன் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது//

இச்செய்தியின்மூலம், முதலமைச்சரின் கண்காணிப்பு வளையத்தில் ஜக்கி வாசுதேவ் இருந்துகொண்டிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

ஆனாலும், மனித மனங்களின் பலவீனங்களை அத்துபடியாய்ப் புரிந்துகொண்டிருப்பவரும், மிகு அதிகாரம் படைத்த பெரிய மனிதர்களைத் தன் துப்பட்டாவில் முடிந்து வைத்திருப்பவருமான அவர் அத்தனை எளிதில் மாநில அரசின் நடவடிக்கைக்குள் சிக்கிக்கொள்ள மாட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது!

=========================================================================