சனி, 24 டிசம்பர், 2022

அல்லா[ஹ்] & எல்லாக் கடவுள்களாலும் கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்கள்!!!

நேற்று[23.12.2022] மாலை, ‘tamil.oneindia' வில் வெளியான கட்டுரையின் இறுதிப் பகுதி கீழே இடம்பெற்றுள்ளது.

//கடந்த 20 வருடங்களாகத்தான் ஆப்கன் பெண்கள், லேசாகத் தலைநிமிர தொடங்கினர்.....

வீட்டை விட்டு வெளியேறி மெல்ல மெல்லப் பெண்கள் படிக்க ஆரம்பித்தனர்.....

வேலைக்கும் செல்லத் துவங்கினர்.....

ஆப்கன் வரலாற்றில் கல்விக்கான பொற்காலம் என்று கடந்த 20 வருடங்களை மட்டுமே சொல்ல முடியும்.....

ஆனால், அதற்குள் இந்தத் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்.. கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளாத் துயரில் ஆழ்த்தி வருகிறது.....

எங்கே போவது, என்ன செய்வது என்றே தெரியாமல் ஆப்கன் பெண்கள் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்...!!//

இச்செய்தியால் நம் அடிநெஞ்சிலிருந்து வெளிப்பட்ட வேதனைக் குரல் பின்வருமாறு:

ளும் தலிபான்கள் ‘சரியத்’[chariot] சட்டத்தை’ச் சரியாக அமல்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, அங்குள்ள பெண்களுக்கான அத்தனை உரிமைகளையும் பறித்து, உடலுறவுக்கான கருவிகளாக மட்டுமே அவர்களை ஆக்குவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

இதை ஐ,நா.சபை கண்டிக்கிறது; அமெரிக்கா கண்டித்திருக்கிறது. இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது.

இதனாலெல்லாம் எந்தவிதப் பயனும் இல்லை என்பது இந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளுக்கும் தெரியும்.

‘அல்லா[ஹ்]’ உட்பட உலகோரால் துதிக்கப்படுகிற, ஆயிரக்கணக்கில் உள்ள அத்தனைக் கடவுள்களும் மோனத் தவத்தில் மூழ்கிகிடக்கிறார்கள்[அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை இல்லைபோலிருக்கிறது!].

அவர்களாலும் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்வில் விடியல் தோன்ற வழியேதும் இல்லை என்பது உறுதியாகிறது.

ஆக, ஆப்கானிஸ்தான் பெண்களுக்கென்று ஆதரவுக்கரம் நீட்ட எந்தவொரு நாதியும் இல்லை.

கடவுள்களும் மனிதர்களும்[ஆடவர்கள்] இவர்களைக் கைவிட்டுவிட்ட நிலையில்.....

ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் வாழும் இஸ்லாம் மதப் பெண்கள்கூட அவர்களுக்காகக் குரல் கொடுக்க மறந்து மௌனம் சுமந்து முடங்கிக் கிடக்கிறார்களே, ஏன் இந்த அவலம்?!

ஆண்களுக்கு அடங்கி, வீட்டோடு அடைபட்டு வாழ்வதிலேயே சுகம் காண்பது இவர்களுக்கு வழக்கமாகிப்போனதோ!?

===========================================================================

https://tamil.oneindia.com/news/international/did-the-afghan-girl-students-dress-fancy-and-taliban-announces-indefinite-ban-on-university-educati/articlecontent-pf831919-490937.html