“அவனவன் தன்னுடைய மன அழுத்தம் குறையணும்னு இங்கே வந்தா, இருக்கிற நிம்மதியும் போயிடும். ‘சைலன்ஸ்’ பயிற்சி என்னும் 7 நாள் பயிற்சி மரண வேதனைக்கு ஒப்பானது. ‘பாப ஸ்பந்தனா’, ‘சூன்ய தியானம்’, ‘அட்ட யோகா’ உள்ளிட்ட பயிற்சிகள முடித்தால், ‘உங்களைச் சத்குருவே சந்திப்பார்’ என்று ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, ‘யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகக் கடவுள்[ஜக்கி] நம்மைச் சந்திக்க உள்ளார்’ என்கிற மயக்க நிலையைப் பயிற்சிக்கு வந்தவர் மனதில் விதைப்பார்கள் பயிற்சியாளர்கள்.
அவர்கள் சொன்னபடியே ஜக்கியும் சந்திப்பார்; “உன்னுடைய ‘ஆரா’[நம் உடலைச் சுற்றி ஒளிக் கவசம் போல் தோன்றுகிற, மனிதனின் ஆற்றலில் இருந்து வெளிப்படும் ஒன்றுதான் ‘ஆரா’; ஆன்மா என்றும் சொல்லலாம்]வுடன் நான் கலந்துவிட்டேன். நீ எனக்குச் சொந்தமானவள்” என்பார் தான் சந்தித்த பெண்ணிடம். அப்புறம்.....[இதுக்கப்புறம் என்ன நடக்கும் என்று அனுமானித்துச் சொல்வது நம்மை வம்பில் மாட்டிவிட்டுவிடும்!].
ஜக்கியுடன் கலந்துவிட்டதாகச் சொல்லப்படும் நபர் ஆணாக இருந்தால், ஊதியம் இல்லாத வேலையாளாகவோ, ஏவல் நாயாகவோ ஜக்கிக்குச் சேவகம் செய்வார்”
மேற்கண்ட இந்த விவரங்களை வழங்கியவர் ‘ஈஷா’வில் பணியாற்றிய ஒருவர்.
இதை அவர் ஏன் சொல்லவேண்டும்? அதற்கான சூழ்நிலை என்ன?
தொடர்ந்து படியுங்கள்.
மேலே விவரிக்கப்பட்டதான பயிற்சியில் கலந்துகொண்டார் ’சுபஸ்ரீ’ என்னும் பெண்.
பயிற்சி 11 மணிக்கு முடிவடையும் என்று அவர் தன் கணவன் பழனிக்குமாரிடம் சொல்லியிருந்தார்.
பழனிக்குமாரும் அந்த நேரத்துக்கு வந்து ஈஷா மையத்திற்கு வெளியே காத்திருந்தார்.
பிற்பகல் 3 மணிவரை சுபஸ்ரீ வரவில்லை.
விசாரித்ததில் சுபஸ்ரீ 9.30 மணிக்கு ஈஷாவிலிருந்து வெளியேறி வாடகைக் கார் பிடித்து, ‘செம்மேடு முட்டத்து வயலில் இறங்கியது தெரியவந்தது. அது தவிர, ஈஷாவிலிருந்து சுபஸ்ரீ தலை தெறிக்க ஓடிவரும் காட்சி சி.சி.டி.வி. யில் பதிவாகியிருந்ததும் தெரிய வந்தது.
‘மனைவி எங்குச் சென்றார்? உயிரோடுதான் இருக்கிறாரா?’ என்னும் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் பழனிக்குமார். வழக்குப் பதிவு செய்து இந்த அசம்பாவிதம் குறித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.
‘பாப ஸ்பந்தனா’, ‘சூன்ய தியானம்’, ‘அட்ட யோகா’... என்று இவையும், இன்னும் எவையெவையோ மந்திர தந்திரங்களையும் கையாண்டு, ஏராளமான அப்பாவி மக்களைத் தனக்கான அடிமைகள் ஆக்கிகொண்டிருக்கிறார் ஜக்கி. இவற்றையெல்லாம் இவர் யாரிடம் கற்றார்?
கற்றுக்கொடுத்தவர் அந்த ‘ஈஷன்’தானோ என்னவோ!?
* * * * *
*****‘நக்கீரன்’[2022 டிசம்பர் 24-27] இதழில் வெளியான செய்தித் தொகுப்பிலிருந்து திரட்டிய குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேறு பல ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியிருப்பது அறியத்தக்கது.
==================================================================================