ஞாயிறு, 25 டிசம்பர், 2022

கர்னாடக[கா]க் குமரிகளின் கருணை உள்ளம்!!!

உலகம் முழுவதுமே Free Hugs என்ற பெயரில், சில ஆர்வலர்கள் தங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகக் கட்டிப்பிடித்துக் கொள்ளலாம் என்று பதாகைகள் ஏந்தி இயக்கம் நடத்துவதை[பெண்கள்தானே?] வழக்கமாகக் கொண்டுள்ளார்களாம்.

இது குறித்துக் கேள்விப்பட்டோ படாமலோ, பெங்களூருவில் இரு கல்லூரி மாணவிகள் இந்த free hugs இயக்கத்தை நடத்திப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள் என்பது திகட்டவே திகட்டாத இனிப்புச் செய்தியாகும்.

கிறித்துமஸ் & புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளதால், பெங்களூருவின் கடைத்தெருக்கள் பரபரப்பாகக் காணப்படும் நிலையில்.....

அந்நகரின் சர்ச்கேட் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு அபூர்வா அகர்வால், தனிஷி என்னும் பெயர்களைக் கொண்ட அந்த இரு கல்லூரி மாணவிகள் free hugs என்ற பதாகைகளை ஏந்தி நெடுநேரம் காத்திருந்து. அந்தப் பகுதியில் சென்ற பலரையும் கட்டித் தழுவித் தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது அது தொடர்பான செய்தி[https://tamil.news18.com/news/national/two-girl-students-offered-free-hugs-in-bengaluru-church-street-861777.html].

“வந்துநின்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் 100 பேரைக் கட்டித்தழுவி உலகச் சாதனை நிகழ்த்தியுள்ளோம்” என்று அவர்கள் மிகு பெருமிதத்துடன் கூறினார்களாம்[இந்தச் சேவையைக் கிழவர்களும் கிழவிகளும்கூடச் செய்யலாமா?].

"ஒரு நபர் நாள்தோறும் எட்டுமுறை கட்டிப்பிடித்தால் அவர் அந்த நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருப்பார்” என ஆய்வாளர்கள் அறிவித்திருப்பதாகவும் அவர்கள் சொன்னார்களாம். அந்த ஆய்வு உண்மையானதுதானா என்று அவர்களிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்துகொண்ட எவரும் கேட்டிருக்கமாட்டார்கள்[எவனும் கேட்டிருந்தால் அவன் படு கிறுக்கனாவான்].

ஆக, கட்டிப்பிடிப்பதால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது சரியே என்றாலும்.....

உச்சக்கட்ட மகிழ்ச்சி கிடைக்க எட்டுத் தடவை என்பது போதுமா?” என்று இச்சையைக் கட்டுப்படுத்த இயலாமல் அலைந்து திரியும் இளவட்டங்கள் கேட்பார்களே, அதற்கு இந்தக் குமரிகள் சொல்லப்போகும் பதில் என்னவாக இருக்கும்?

விடை தெரிந்தாலும் பதில் சொல்ல விரும்பாத கேள்வி இது!

ஹி... ஹி... ஹி!!!

================================================================