புதன், 21 டிசம்பர், 2022

ஆணின் ‘விந்தணு’வில் தோன்றியதா பிரபஞ்சம்!?!?!?

‘உயிர்களின் தோற்றம்’ குறித்து, மூன்று முன்னணி மதங்களும் மனம்போன போக்கில் கதை திரித்திருக்கின்றன. அவற்றைப் பதிவின் இறுதியில் வாசிக்கலாம். 


முன்னதாக, ‘பிரபஞ்ச[உயிர்கள்]த் தோற்றம்’ பற்றிப் பண்டைய எகிப்தியர்களிடையே வழங்கிய ஒரு சுவையான கதை:

#எகிப்தியப் புராணங்களின்படி முதல் எகிப்தியக் கடவுளான ஆடன் சுய இன்பத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கியதாகக் கருதப்படுகிறது. எனவே, சுயஇன்பம் பண்டைய எகிப்தில் புனிதமானதாகக் கருதப்பட்டது[சுய இன்பம் செய்த ஆடனுக்குக் கோயில் கட்டி விழாக்கள் எடுத்திருப்பார்களோ?!]. 

கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகப் ‘பாரோக்கள்’[?] மக்களின் முன்பு நைல் நதியில் சுயஇன்பம் செய்தனர். பாரோக்களைத் தொடர்ந்து மற்ற ஆண்களும் நைல் நதியில் சுயஇன்பம் செய்தார்கள்# 

அன்றைய எகிப்தியர் பற்றிய மேலும் சில சுவையான செய்திகள்:

*பண்டைய எகிப்தில் திருமணச் சடங்கென்று எதுவுமில்லை. பெண்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிவிட்டுத் தாங்கள் விரும்பும் ஆணின் வீட்டிற்குச் சென்று வாழத் தொடங்கிவிடுவார்கள். 

*விவாகரத்துச் செயல்முறை மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. தம்பதிகளில் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறினாலே இருவரும் விவாகரத்துச் செய்ததாக அர்த்தம்.

*ஆண், பெண் இருவரும் திருமணம் ஆகாதவராக இருக்கும்பட்சத்தில் திருமணத்துக்கு முந்தைய உடலுறவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருத்தல் வேண்டும். விபச்சாரம் மன்னிக்க முடியாத குற்றமாக இருந்தது. அதற்கு மரண தண்டனைகூட வழங்கப்பட்டது.

*அவர்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையை நம்பினர்; இறப்புக்குப் பிறகு ஆன்மாக்கள் தங்கள் உடலைத் தேடும் என்றும் நம்பினார்கள். 

எனவே, ஆன்மாக்கள் தத்தம் உடல்களை அடையாளம் காண்டுகொள்ள வசதியாக, ஒவ்வொரு மம்மியிலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினர்கள். https://tamil.boldsky.com/insync/pulse/unknown-facts-about-the-love-life-of-ancient-egyptians-in-tamil/articlecontent-pf269033-036498.html

உயிர்களின் தோற்றம்:

*கிறிஸ்தவ மதம்:

முதல் இரண்டு நாட்களில் பகல், இரவு, வானம், பூமி ஆகியவற்றையும்[பூமி படைக்கப்படுவதற்கு முன்பே நாட்களைக் கணக்கிட்டது எப்படி?!], மூன்றாம் நாளில் புல், பூண்டு, மரஞ்செடிகொடி ஆகியவற்றையும், நான்காம் நாளில் விலங்குகளையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறப்பன ஆகியவற்றையும் படைத்தார் கடவுள் என்கிறது கிறித்தவ மதம்.

ஏழாம் நாளில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

*இஸ்லாம் மதம்:

முதல் இரண்டு  நாட்கள்... நீர், காற்று, பூமி.

3ஆம் நாள்... கடல்வாழ் உயிரினம், ஊர்வன முதலானவை.

4ஆம் நாள்... ஜான் என்னும் தேவதை[?]

5, 6ஆம் நாட்களில்... முதல் மனிதன் 'ஆதாம்'; முதல் பெண் 'ஏவாள்'.

*இந்து மதம்:

பரமாத்மாவால் படைக்கப்பட்ட 'பிரஹிமா[பிரம்மா]' ஒரு பிரஹ்ம ஆண்டு[16 லட்சம் கோடி ஆண்டுகள்]வரை வாழ்ந்து மானிடர், விலங்கு, பறவை முதலான உயிரினங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் படைத்தார்.

===========================================================================