திங்கள், 30 ஜனவரி, 2023

இழந்த இளமையை மீட்டெடுக்கும் 45 வயது லட்சோப லட்சாதிபதி[millionaire]!!!

“சத்துணவு உட்கொண்டு, உடற்பயிற்சி, யோகாப் பயிற்சி எல்லாம் முறையாகச் செய்தாலும்கூட, 45 வயதான ஒருவரின் இதயத்தை 37 வயதுக்காரருடையதைப் போலவும், நுரையீரலையும் உடலையும் 18 வயதே ஆன ஓர் இளைஞனுக்கு இருப்பதைப் போலவும், உடம்பின் தோலை 28 வயதுக்காரனுடையதை ஒத்ததாகவும் மாற்ற முடியுமா?” என்று கேட்டால்.....

“முடியும்” என்கிறார் 45 வயதான கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜான்சன் என்பவர்[மில்லியனர்].

இதற்காக, இவர் ஆண்டுக்குச் சுமார் 16 கோடி ரூபாய் செலவு செய்கிறார்[காணொலி கீழே].

இவரின் இல்லத்தில், உடல் நலம் பேணுவதற்கான சாதனங்களைப் பராமரிக்கப் பல மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

சிகிச்சை செய்யப் பல்துறை சார்ந்த 30க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் களத்தில் இருக்கிறார்கள்.  

இவரின் இந்த அபூர்வமான சாதனை முயற்சி பற்றி dnawebdesk@gmail.com தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மில்லியனரின் முயற்சி வரவேற்கத்தக்கதுதான்.

ஆனாலும், இதயமும் நுரையீரலும் இளைஞர்களுடையதைப் போல் இருப்பதில் பாதிப்பு ஏதும் இல்லை. உடல் இளைஞருடையதைப் போல மாறினால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றில் முக்கியமானவை…..

இவர் திருமணம் ஆனவராக இருந்தால், வாலிபராக மாறிய இவரின் பாலியல் தேவையைக் கிழவியாகிக்கொண்டிருக்கும் இவரின் மனைவியால் நிறைவு செய்ய இயலாது. ஆதலால், அவரையும் குமரியாக்க வேண்டும். அதற்கும் கோடிக்கணக்கில் செலவு செய்தல் தவிர்க்க இயலாதது.

குழந்தைகள் இருந்தால், தோற்றத்தால் அவர்கள்  இவரைவிடவும் இளையவர்களாகவே இருந்துகொண்டிருப்பது கட்டாயம் ஆகிறது.  அவர்களுக்கும் சிகிச்சை தேவை.

வயது அதிகரிக்கும்போது அதனால் அனுகூலங்கள் சில உள்ளன. அவற்றை இழக்க நேரிடலாம். 

எது எப்படியோ, முதுமையை இளமைப்படுத்துவதில் பாதகங்களும் உண்டு என்றாலும்[காலப்போக்கில் அவை தவிர்க்கப்படலாம்] இம்முயற்சி வவேற்கத்தக்கதே.

காலப்போக்கில், பெரும் செல்வந்தர்கள் பலரும் ஜான்சனைப் பின்பற்றி இளைஞர்களாக வலம்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பணக்காரர்கள் என்றில்லாமல், ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பயன்பெறும் வகையில் இதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்கான கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் நிகழ்த்துதல் வேண்டும். 

இன்றைய கிழங்கள் நாளைய குடு குடு கிழங்களாக ஆவதற்குள் இது நிகழ்த்தப்பட்டால் அது நம்மைப் போன்றோருக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாக அமையும் என்பது உறுதி!

ஹி… ஹி… ஹி!!!

================================================================================

https://www.msn.com/en-in/money/topstories/ageing-can-be-reversed-45-year-old-ceo-spends-rs-16-crore-every-year-to-look-18/ar-AA16M0pS?ocid=msedgdhp&pc=U531&cvid=390fb93ea5fd4b80bdc93b9b6b392ee7