ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அப்பாவிக் கணவன்களும் அடங்காப் ‘பிடாரி’களும்!!!

வள் 22 வயது அழகுப் பெண்.

கணவன் அழகாக இல்லை என்பதால் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை.


கணவன் மீதான வெறுப்பு அதிகமாகவே குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கிவிடுகிறாள்.


கணவனாகப்பட்டவன் அடிக்கடி மாமியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சியும் கெஞ்சியும் அவளின் கோபம் தணித்துத் தன் தாபத்தையும் தணிக்க முயல்கிறான்.

இவனின் தொல்லைகளைப் பொறுத்துக்கொள்ள இயலாத அவள், அவனுக்கு முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து, அவனின் நாக்கைப் பாதி அளவுக்குக் கடித்துத் துண்டாக்கிவிடுகிறாள்[https://tamil.oneindia.com/].


[“நல்லவேளை ‘அதை’க் கடித்துத் துண்டாக்கவில்லை. மகராசி நல்லா இருக்கணும்”னு அவளை அவன் வாழ்த்தியிருப்பானோ?].


[கடித்தவளும் கடிகொடுத்தவனும்]
துண்டிக்கப்பட்ட நுனி நாக்குடன் அந்த அப்பாவி மருத்துவமனையைத் தேடி ஓடியிருக்கிறான். என்ன ஆகுமோ!

ன்னொரு பெண். தன் கணவனை 4 ஆண்டுகளுக்கு முன் மணவிலக்கு[விவாகரத்து]ச் செய்தவள் அவள். ஒவ்வோர் ஆண்டும் விவாகரத்துப் பெற்ற அந்த நாளைத் தனக்கான சுதந்திரத் தினமாகக் கொண்டாடுகிறாளாம்[இந்தியன் எக்ஸ்பிரஸ்]. 


[தன் திருமண நாளை அவள் துக்கத் தினமாகக் கொண்டாடவும் செய்வாள்].


வளும் ஒரு பெண்தான். அளவு கடந்த அன்பு காரணமாக மிக மிக மிக அழுத்த்த்த்தமாக அவளுக்கு அவள் கணவன் முத்தம் தருவான். இதனால் ‘மூச்சுத் திணறல்’ ஏற்பட்டுச்  சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானாள் அவள். அவளின் வாழ்க்கையே நரகமாக ஆனது. எவ்வளவோ முயன்றும் அவனைத் திருத்த முடியாததால் நீதிமன்றத்தை நாடி மணவிலக்குப் பெற்றாள்[இந்தியன் எக்ஸ்பிரஸ்].


[முத்தம் கொடுப்பதில் காட்டிய அதீத அழுத்தத்தைக் கட்டியணைப்பதில் அவன் காட்டியிருந்தால் இந்த அநீதி நிகழ்ந்திருக்காது! ஹி... ஹி... ஹி!!!]


இவையெல்லாம் கடந்த சில நாட்களில் ஊடகங்கள் வாயிலாக அறிந்த செய்திகள்.


இம்மாதிரியான ‘சில’ அடாவடிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அப்பாவி ஆண்களின் கதி என்ன?


வேறென்ன, 


எஞ்சிய வாழ்நாளைக் ‘கல்யாணம் ஆன பிரமச்சாரி’களாக் கழிப்பார்கள்.


அல்லது,


கவர்ச்சியுள்ள அழகான பெண் ரோபோக்கள் விற்பனை செய்யப்படும் நாடுகளுக்குச் சென்று அதுகளை வாங்கிவருவார்கள்.


மேலும்,


உள்நாட்டிலேயே பெண் ரோபோக்களை உற்பத்தி செய்வதற்குத் தொழில்சாலைகள் தொடங்கும்படி அரசுக்குக் கோரிக்கை வைப்பார்கள். அரசு தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.


காலப்போக்கில்,


ஒருபாலினத் திருமணங்களும் அதிகரிக்கும்.


இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? அதையெல்லாம்.....


காதல், காமம், கலவி, கள்ளப்புணர்ச்சி, களங்கம், கலக்கம், கலகம் என்று காலமெல்லாம் அலைந்து திரியும் ஆணையும் பெண்ணையும் முடிவில் அடங்க வைக்கிறானே ‘அவன்’... அவனன்றி வேறு யார் அறிவார்?!

==============================================================================

***உண்மைச் சம்பவங்களில் கொஞ்சம் கற்பனையும் நகைச்சுவையும் கலந்து  உருவாக்கப்பட்ட பதிவு இது. வம்புதும்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், ஊர் முதலியன சேர்க்கப்படவில்லை! ஹி... ஹி... ஹி!!!