சனி, 28 ஜனவரி, 2023

கருந்துளை ஒலியும் கடவுள் துகளும் பக்தகோடிகளின் புளுகும்!!!

ணுதான் பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு ‘மூலம்’ ஆக இருப்பதாக அறிவியல் சொல்கிறது.

1964ஆம் ஆண்டில் ‘பீட்டர் ஹிக்ஸ்’ என்ற விஞ்ஞானி, அணுக்கள் உருவாவதற்கும் அடிப்படையாக இருப்பது ‘துகள்’ என்று கூறினார். அந்த ’மூலத் துகள்’ அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான்[போசான் என்பவரின் பங்கு இதில் உள்ளது] என்று அழைக்கப்பட்டது.

‘லியோன் லெடர்மான்’ என்ற இயற்பியல் விஞ்ஞானி 1993இல் ஹிக்ஸ் போஸானுக்குக் ‘கடவுள் துகள்’ (God particle) என்று பெயர் சூட்டினார்.

இந்தப் பிரபஞ்சத்தைக் கடவுள்தான் உண்டாக்கினார் என்று கூறும் ஆத்திகர்களைக் கேலி செய்வதற்காகவே அவர் அப்படிப் பெயர் சூட்டினார். அது தெரிந்திருந்தும், அணு உருவாகக் காரணமான துகளைக் ‘கடவுள் துகள்’ என்று சொல்லித் திரிந்தார்கள்... திரிகிறார்கள் ஆத்திகர்கள்.

கடவுள் துகள்தான் அனைத்திற்கும் ‘மூலம்’ என்றால், அந்தக் கடவுள் துகளின் தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலைத் தேடும் நேர்மைக் குணம் அவர்களுக்கு இல்லை.

கடவுள் துகளைக் கடவுள் ஆக்கி, பிரபஞ்சத் தோற்றம் குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

ஆனால், துகளுக்கு மூலம் எது? அந்த மூலத்துக்கு ‘மூலம்’ எது? அந்தவொரு மூலத்தின் மூலத்திற்கு மூலமாக இருப்பது எது? என்றிப்படிக் கேள்விகள் கேட்டு அவற்றிற்குத் துல்லியமான விடை கண்டறிவது இன்றளவும் சாத்தியப்படவில்லை.

சாத்தியப்படாத நிலையில், அணுவின் தோற்றத்திற்கு ’மூலம்’ஆக உள்ள ‘அணுத் துகள்’ஐக் ‘கடவுள் துகள்’ என்று சொல்லி, கடவுள் இருப்பதை நிரூபித்துவிட்டதாக நினைத்தார்கள்; சொல்லிக்கொண்டார்கள்.

அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக்கொள்ளும் இவர்களுக்கு, அண்மைக் காலத்தில்[2022], ‘அண்டவெளியிலுள்ள கருந்துளையிலிருந்து ‘ஒலி’ வெளியாகிறது என்பதை, ஆடியோ மூலம் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காணொலி:

https://www.bbc.com/tamil/science-62664710 [கிளிக்]

 இந்தச் செய்தி அவர்களுக்குத் தெரிந்திருந்தால்ல்.....

கருந்துளை ஒலிதான் ‘ஓங்கார ஒலி’[ஓம்] என்று அலப்பறை செய்திருப்பார்கள்.

கருந்துளையிலிருந்து ஒலி வெளியாகிறது என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்களே தவிர, அந்த ஒலிதான் அனைத்திற்கும் ‘மூலம்’[அது உருவான இடமே கருந்துளை என்பதால்] என்று சொல்லவில்லை.

மாறாக, தோற்றம்’ குறித்த ஆய்வு தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இனியும் பிரபஞ்சத் தோற்றம் குறித்த ஆய்வு தொடந்துகொண்டிருக்குமே தவிர, இதற்கு முடிவு என்பது எப்போதும் இல்லை என்றே சொல்லலாம்.

அணுக்கள், துகள்கள், கருந்துளைகள், ஒலிகள் என்றிவை பற்றித் தொடர்ந்து நிகழ்த்தப்படும் இந்த ஆய்வுதான் சிந்திக்கும் அறிவிவை மேம்படுத்துகிறது; விரிவடையச் செய்கிறது.

இந்தச் சிந்திக்கும் அறிவுதான், அனைத்திற்கும் மாஉலமாக இருப்பவர் கடவுளே என்று முடிவு செய்வதற்குத் தடையாக அமைகிறது. மூடநம்பிக்கைகள் உருவாகாமல் தடுக்கிறது.

இம்மாதிரியான ஆய்வுகளை நம் மக்கள் அறியும்படிச் செய்வதன் மூலம், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையே தங்களுக்குச் சாதகமாக ஆத்திகவாதிகள் பயன்படுத்துவதை நம்மால் தடுத்திட இயலும்.

===================================================================================

#ஏராளமான துகள்களும் காற்றும் வழித்தடமாக இருப்பதால், ஒலி எளிதாகப் பயணிக்க முடிகிறது.

2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கருந்துளையின் ஆடியோவை நாசா வெளியிட்டது. கிளிப்பில் ஒலி மிகவும் கேட்கக்கூடியதாக இருந்தாலும், கருந்துளைக்குள் இருந்தாலும், விண்வெளியில் யாராலும் அதைக் கேட்க முடியாது.

நாசா ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கேட்கும் வகையில் சேகரிக்கப்பட்ட ஒலிகளின் அதிர்வெண்ணை 144 முதல் 288 குவாட்ரில்லியன் மடங்கு உயர்த்தவேண்டியிருந்தது; சமீபத்தில்தான் ஆடியோ கோப்புகளை உருவாக்கிப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளமுடிந்தது. இந்த வெளியீட்டை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்#