சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி பாகிஸ்தான்[பல பெண்களைத் திருமணம் செய்வது இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளது] குடிமகன். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர்.
பாகிஸ்தானின் ‘குவெட்டா’வுக்கு அருகே வசிக்கும் 50 வயதான இவர் ஒரு மருத்துவர்.
அண்மையில் 60ஆவது குழந்தைக்குத் தந்தையாகிச் சாதனை நிகழ்த்துயுள்ளார் கில்ஜி. 60ஆவதைப் பெற்றெடுத்த குஷியில் அந்தக் குழந்தைக்குக் ‘குஷால் கான்’ என்று நாமகரணம் சூட்டியுள்ளாராம்.
மூன்று மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார் கில்ஜி.
இந்த மூன்று பெண்மணிகளும் இன்னும் எத்தனைக் குழந்தைகளையும் ஈன்றுபுறந்தரத் தயாராகவே இருக்கிறார்களாம்.
ஆயினும், நம்ம சர்தார் ஜான் அவர்களுக்குப் புதுப் பெண்டாட்டி(கள்) கட்டி அவர்(கள்) மூலம் குழந்தைகள்[கணக்கெல்லாம் இல்லை] பெற்றுக்கொள்ள ஆசையாம்.
தணியாத அந்த ஆசை காரணமாக, நண்பர்கள் மூலம் பெண்(கள்) தேடுகிறாராம்.
பாகிஸ்தானில் பணவிக்கம் அதிகரித்துவரும் நிலையில் இவரின் நிதி நிலைமையும் சரியில்லைதான். ஆயினும், மேலும் மேலும் மேலும் பல பிள்ளைகளைப் பெறும் ஆசை மட்டும் இவருக்குத் தணியவே இல்லை.