குரங்கு ஒன்று தன் குட்டியை நாய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் காணொலி[வீடியோ]யை, அண்மையில் இணையத்தில்[ட்விட்டர்] காண நேர்ந்தது.
வலைதளங்களில் பெரும் பரபரப்பை[வைரல்] உண்டுபண்ணியது இந்தக் காணொலி.
காணொலிக்காரர் இதற்குத் தந்த தலைப்பு: ‘ஒரு தாய் தன் குழந்தைகளை இந்த நாய்களிடமிருந்து காப்பாற்ற, முடிந்த அனைத்தையும் செய்கிறாள்’...[இந்தித் தலைப்பின் தமிழாக்கம் இது].
குரங்குக்கு உதவாமல், வீடியோ பதிவு செய்த நபரைச் சமூக வலைதளவாசிகள் வசைபாடி வருகின்றார்களாம்.
"இந்த வீடியோவை உருவாக்கிய நபர் என் பார்வையில் மோசமான நபர்" என்கிறார் ஒரு பயனர்.
மற்றொரு பயனர், "குரங்கு ஒரு தாய்க்குரிய கடமையை நிறைவேற்றியுள்ளது, ஆனால், இந்த வீடியோவை எடுத்தவர் ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய கடமையை நிறைவேற்றவில்லை" என்கிறார்[‘News 18’ வெளியிட்ட காணொலியில் இடம்பெற்ற கருத்துரைகள் இவை].
வலிமை மிகுந்த கொடூர விலங்குகளில் ஒன்று மற்றொன்றைத் தாக்கி அழிக்கும்போது அழிவுக்குள்ளாகும் ஒன்றைக் காப்பாற்றுவது இயலாது. அந்நிலையில் அதைப் படம் பிடித்துக் காணொலியாக்கி, பிறர் காணும்வகையில் காட்சிப்படுத்துவது தேவையானதுதான். இம்மண்ணில் நிகழும் இது போன்ற எத்தனை எத்தனையோ கொடூரங்களை மக்கள் அறிந்திட உதவுகிறது அது.
ஆனால், சில கற்களைக் காட்டி மிரட்டினாலே நாய்கள் மிரண்டு ஓடுவது சாத்தியமாக இருக்கையில், மேற்கண்ட காட்சியைக் காணொலியாக்கிப் பகிர்ந்தது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் சந்தேகமில்லை.
இவரைப் போன்றவர்கள் மனித உருவில் நடமாடும் போலி மனிதாபிமானிகள் ஆவார்கள்.
காணொலி:
https://twitter.com/i/status/1602678990459674629 -‘கிளிக்’குக.
* * * * *
https://kadavulinkadavul.blogspot.com/2022/10/blog-post_25.html
===================================================================================