திங்கள், 23 ஜனவரி, 2023

‘ராம ராஜ்ஜியம்’... கனவு காண்போர் கவனத்திற்கு.....

[கே.எஸ்.பகவான்]

ராமனை ஓர் ‘அவதாரப் புருசன்’ என்று போற்றிப் புகழ்வதோடு, இந்தத் தேசத்தை ராம ராஜ்ஜியமாக ஆக்க வேண்டும் என்று ராம பக்தர்கள்[பாஜக ஆதரவுடன்] முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

வால்மீகி ராமாயணத்தின் உத்தர காண்டத்தைப் படித்தால், அவன் பெயரில் புதிய ராஜ்ஜியம் உருவாக்கும் அளவுக்கு ராமன் சிறந்தவன் அல்ல என்பதை இவர்களால் புரிந்துகொள்ள இயலும்.

‘ராமன் 11,000 ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை, ஆண்டது 11 ஆண்டுகள் மட்டுமே[ஒரு மனிதனாக. கடவுள் அவதாரம் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை]. சீதையுடன் அமர்ந்து நாள் முழுக்கக் குடித்துக்கொண்டே இருப்பான்..... அவன் தன் மனைவி சீதையைக் காட்டிற்கு அனுப்பியதற்காகக் கவலைப்படவில்லை.’ 

இதற்கு வால்மீகி ராமாயணமே ஆதாரமாக உள்ளது என்கிறார் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான கே.எஸ்.பகவான்[ANI செய்தி].

கடந்த காலங்களில் இந்து மதத்திற்கு எதிராகப் பேசியதற்காக அயோத்தி ராமனின் பக்தர்களால் பலவகையிலும் அவமானப்படுத்தப்பட்டவர் இவர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பெங்களூருப் பெண் ஒருவர், இவர் மீதான தன் வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் இவர் மீது மை வீசினார்.

வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8, சுலோகம் 12ஐ ஆதாரமாகக் காட்டி, ராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தான் என்னும் செய்தியும் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது http://www.ttamil.com/2020/03/blog-post_3.html.

ராமன் என்னும் மனிதன் அயோத்தியை ஆண்டான் என்பதற்கே போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவன் திருமாலின் அவதாரம் என்று பொய்யுரை பரப்பி, இந்திய நாட்டை ராம ராஜ்ஜியம் ஆக்குவதற்கு ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ராமனின் விசுவாசிகளுக்கு நாம் சொல்ல விரும்புவது ஒன்றுண்டு.

அது.....

பேசும் மொழி, இனம், மதம், நாகரிகம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தம்மை இந்தியராகக் கருதி ஒற்றுமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து, “ராம ராஜ்ஜியம் அமைப்போம்” என்று கூவிக்கொண்டிருந்தால் அந்த ஒற்றுமை வெகு விரைவில் சிதைவுறும் என்பதைக் கவனத்தில் கொள்வீராக!!!

===================================================================

https://www.msn.com/en-in/health/nutrition/lord-rama-used-to-drink-all-day-after-meeting-sita-in-afternoon-retired-professor-ks-bhagwan-sparks-major-controversy-in-karnataka/ar-AA16BMBk?ocid=msedgdhp&pc=U531&cvid=f8d98b408fe8440c9e73046416ffe32a