இந்த அமைப்பு, சமூகத்தில் காணப்படக்கூடிய ஊழல், போதைப் பொருள் பழக்கம், பயங்கரவாதம், மூட நம்பிக்கை போன்ற தீங்கு விளைவிக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களைக் கவரும் வகையில் ‘பேய் முகமூடி’ அணிந்தும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த கறுப்பு உடை உடுத்தும் மக்களிடம் பரப்புரை செய்வார்கள்.
குழு உறுப்பினர்களின் பிறந்த நாட்களை, சுடுகாடுகளுக்குச் சென்று, தகன மேடையில் கேக் வெட்டிக் கொண்டாடுவார்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீந்தர் ரிக்கி என்பவர் இதனை உருவாக்கினாராம்.
அப்போது, நண்பர்களுடன் சுடுகாட்டுக்குச் சென்று, புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடி மக்களிடையே மிகப் பெரியதொரு அதிர்வலையை ஏற்படுத்தினாராம்.
நம்மைப் போன்ற பகுத்தறிவுச் சிந்தனையாளர்களால் பின்பற்றத்தக்கவை இவர் தொடங்கிவைத்த மேற்படி முட்டாள் குழுவினரின் நடவடிக்கைகள்.
ராஜீந்தர் ரிக்கியின் நினைவைப் போற்றும் வகையில், அடுத்துவரும் ஒரு கெட்ட நாளில், கெட்ட நேரத்தில்[ஒரு ஜோதிடரைச் சந்தித்துக் கேட்க வேண்டும். ஹி… ஹி… ஹி!!!] ‘முட்டாள்கள் சங்கம்’ என்னும் அமைப்பை நாமக்கல்லில் தொடங்கவுள்ளோம்.
நீங்களும் உங்கள் ஊரில் தொடங்கலாமே!
===============================================================================
நன்றி: தினத்தந்தி