கடந்த காலங்களில், ஆண்கள் எந்த அளவுக்குப் பெண்களை அடக்கி ஆண்டார்கள், அவர்களைப் பற்றிய வெறுக்கத்தக்க நம்பிக்கைகளை வளர்த்தார்கள், மிக இழிவாக நடத்தினார்கள் போன்றவை பற்றிய செய்திகளை இடுகையின் இறுதியில் தரப்பட்ட தளத்தின் மூலம் அறிய முடிந்தது.
பெண்கள் குறித்த தவறான நம்பிக்கைகளை மக்கள் மனங்களில் விதைத்தவர்களின் பெயர்களை[அறிந்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதால்] தவிர்த்துள்ளேன்.
தெளிவாக விளக்கப்படாத செய்திகளையும் சேர்க்கவில்லை. தொகுக்கப்பட்ட ‘பகீர்’ செய்திகளை இங்கு வாசிக்கலாம்.
* * * * *
*உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு ஆபத்தானது. ஏனெனில் இது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தும்.
*ஆண்கள் விரும்பினால் மட்டுமே உடலுறவு கொள்ளலாம். இது குறித்த ஆசையைப் பெண்கள் எவ்வகையிலும் வெளிப்படுத்துதல் கூடாது.
*அடிக்கடி தங்களின் பிறப்புறுப்பைத் தொடும், அல்லது சுயஇன்பம் அனுபவிக்கும் பெண்களுக்குக் கொங்கைகள் வளராது.
*பெண்கள் ஆடை உடுத்தாமல் நிர்வாணமாக உடலுறவு கொண்டால்தான் குழந்தை பிறக்கும்.
*பெண்களின் மூளை ஆண்களைவிடக் குறைவான திறன் கொண்டது[ஒரு காலத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது உட்பட அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இது முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது].
*சிறுமிகளுடன் உடலுறவு கொண்டால் பாலியல் நோய் குணமாகும். {இந்தக் கொடூர மூடநம்பிக்கை இன்றும்கூட ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் உள்ளது[இந்தியாவிலும்தான். இங்கு சிறுமிகள் வன்புணர்வு செய்யப்படும் செய்தி அவ்வப்போது வருவது கவனிக்கத்தக்கது]}.
*கருவுறுதல் பெண் விரும்பினால் மட்டுமே நிகழ்வது[இந்த முட்டாள்தனமான நம்பிக்கை பழங்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது].
*அசிங்கமான விஷயங்களைப் பார்க்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அசிங்கமான குழந்தைகள் பிறக்கும் அபாயம் உள்ளது.
*பெண்களுக்கு அலையும் கருப்பைகள் உள்ளன.
*மாதவிடாயின்போது, பெண்கள் தேனீக்களைப் பார்த்தாலே அவை இறந்துவிடும்.
*மாதவிடாய் பட்டால் கண்ணாடி மங்கும். அதன் மூலம் கத்தியின் முனையைக்கூட மழுங்கடிக்கலாம்.
*மாதவிடாய், குழந்தைகளைப் பலவித நோய்கள் தாக்குவதற்குக் காரணமாக உள்ளது.
*மாதவிடாயின்போது பெண்களுக்கு வலிப்பு நோய், தொழுநோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புள்ளது.
*பெண்களின் மாதவிடாயில் நச்சுத்தன்மை உள்ளது. அதன் மீது பூவை வைத்தால் அது கருகிவிடும்.
===================================================================