‘பழநி கோயில் கும்பாபிசேகம் சன
வரி 27ஆம்
தேதி நடந்து முடிந்திருக்கிறது.
கும்பாபிஷேகத்துக்கு முந்தைய தினம் ஆகம விதிகளை மீறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சக்கரபாணி, அரசு அதிகாரிகள்[குடும்பத்தினருடன்] உட்பட 400க்கும் மேற்பட்டோர் கருவறைக்குள் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகிவருகிறது. இந்த நிலையில் ஆகம விதிகளை மீறிப் பலர் கருவறைக்குள் சென்றதற்குப் ‘பழநி ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தப் பேரவை’யினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்’ என்பது ‘ஆனந்த விகடன்’ வழங்கியுள்ள செய்தி.
400 என்ன, அதற்கு மேற்பட்டவர்களும் தினசரி கருவறைக்குள் சென்று வழிபடலாம். இதில் தவறொன்றும் இல்லை.
“கூடாது, ‘அர்ச்சகன்கள்’ மட்டும்தான் என் அருகில் வரவேண்டும். மற்றவர்கள் வந்தால் தீட்டாகும்” என்று எப்போதாவது முருகன் தன் பக்தர்களிடம் கூறியிருக்கிறாரா?
இல்லையென்றால், சாமியின் பெயரால் தட்டேந்திப் பிழைப்பு நடத்தும் அவர்களிடமேனும் சொல்லியுள்ளாரா? எப்போது சொன்னார்? அதற்கு என்னவெல்லாம் ஆதாரம்?[எல்லாம் நம்பிக்கைதான் என்று சொல்லியே மூடத்தனங்களைத் தக்கவைப்பது வழக்கமாக உள்ளது].
கருவறைக்குள் நுழையக்கூடாதவர்கள்[இந்த அர்ச்சகன்களுக்கு உள்ள யோக்கியதை மற்றவர்களுக்கு இல்லையா?] நுழைந்துவிட்டதால் மீண்டும் கும்பாபிஷேகம்[நடத்த வேண்டும் என்று ஓர் உத்தமக் குருக்கன்[கிறுக்கன்] 'கேட்பொலி’[audio] வெளியிட்டிருக்கிறான் என்பது புதிய செய்தி[https://www.puthiyathalaimurai.com/newsview/154830/Palani-Temple-priest-controversial-audio-says--some-people-violated-their-rules.] இதன் மூலம் இங்குள்ள மூடர்களைப் போராடத் தூண்டுவது இவனைப் போன்றவர்களின் நோக்கம்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு.....
மந்திரம் சொல்லித் தந்திரமாய்த் தம் மேலாண்மையைத் தக்கவைக்க முயலும் இவன்கள் கட்டிவிட்ட கதைகளை நம்பி, பக்தர்கள் கேனயர்களாகவே இருக்கப்போகிறார்கள்?
எது எதற்கோ போராட்டம் நடத்துகிற நம் மக்கள் பக்தி விசயத்தில் மட்டும் பயந்து நடுநடுங்கிப் பதுங்கிக் கிடப்பது ஏன்?
ஆறறிவாளர்களே விழிமின்! எழுமின்! பக்தியின் பெயரால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் எதிரான அக்கிரமச் செயல்களைத் தடுத்து நிறுத்திடுவீர்!
* * * * *
தங்கக் கோபுரத்தில்[படம் கீழே] அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் இருப்பது தெரிகிறது. இவர்களே தமிழில் பக்திப் பாடல்கள் பாடிக் குடமுழுக்குச் செய்யும் காட்சியைக் காணும் வாய்ப்பு விரைவில் அமைதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.
=========================================================================