அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 1 பிப்ரவரி, 2023

அமுத மழை பொழிவிக்கும் ‘அமிர்தகால’ப் பட்ஜெட்!!!


 இந்த ஆண்டின் பட்ஜெட்டை, ‘அமிர்தகால வ.செ.கணக்கு’ என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா அம்மையார். அமிர்தகாலம் என்பது வேதகால ஜோதிடத்திலிருந்து வந்த வார்த்தை என்கிறார். 

பட்ஜெட் வரவேற்புக்கு உரியதோ அல்லவோ, இந்தியர்கள் இத்தனை பெரிய புளுகுப் புராணப் பித்தர்களா என்று உலகோரை எண்ண வைப்பதாக உள்ளது இந்த ‘வ.செ.’ கணக்கின் தலைப்பு.

அமிர்தகாலம் என்பது போற்றுதலுக்குரிய  தவயோகிகளான ‘சப்த ரிஷிகள்’ வாழ்ந்த காலமாம். சப்த ரிஷிகள் வாழ்ந்ததால் அது அமிர்த காலம்[அமுதம் பொங்கி வழிந்த காலம்] ஆயிற்று.


இந்த ‘ச.ரிஷிகள்’ கதை தெரிந்தால், இது அமிர்தகாலமா, ஆபாசக் கதைகள் உலாவிய காலமா என்று கேட்கத் தோன்றும்.


இவர்களை[‘சப்த ரிஷிகள்’]ப் பற்றிய கதைகளை வாசித்து இறும்பூது எய்துவீராக!


*அத்திரி:

உலகம் தோன்றியபோதே அவதரித்த ரிஷி![அடேங்கப்பா!!!] இவரின் தர்மபத்தினிதான் கற்புக்கரசி அனுசூயை. ஒரு பெண்ணுக்கு, “விடிந்தால் நீ விதவை ஆவாய்” என்று ஒரு முனிவர் சாபம் கொடுக்க, அவள் அனுசூயையை அணுகி முறையிட, சூரியன் உதிப்பதைத் தடுத்து நிறுத்தி ஒட்டுமொத்த உலகையும் நீண்ட நெடுங்காலம் இருளில் மூழ்கடித்தவர் இந்தப் பத்தினித் தெய்வம்![https://temple.dinamalar.com/news_detail.php?id=1340].


*பாரத்துவாசர்:

பாரத்துவாசர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும்போது ‘க்ருடசி’ என்ற கந்தர்வக் கன்னியைக் கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார். அந்தக் கந்தர்வக் கன்னியைக் கண்டு காதல் கொண்ட மாத்திரத்திலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட விந்துவை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தார் துரோணர்[https://www.facebook.com/643906272371620/photos/a.674784755950438/835506363211609/?type=3].


*ஜமதக்கினி:

ரேணுகா என்பவர் இவரின் மனைவி; நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள். ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண்  பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்வனைக் கண்டு சில நொடிப் பொழுதுவரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக்  களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் பானை உடைந்தது. எனவே, வீட்டிற்குத் திரும்பாமல் ஆற்றங்கரையிலே ஜமதக்கினி முனிவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.


ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற ஜமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படிச் சபித்தார். அவரின் கடைசி மகன் பரசுராமர்  முன்வந்து, தந்தையின் ஆணைக்கிணங்க, தனது தாயைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டித்தார்[https://tamil.webdunia.com/article/special-astro-predictions/one-of-the-sapta-rishis-let-us-know-about-jamadagni-120082800059_1.html].


*கௌதமன்: கலிகை கதை எல்லோருக்கும் தெரியும். பஞ்ச கன்னியருள்

ஒருத்தியான இவள், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி. இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட இவளைத்தான் கௌதமன் சாபமிட்டுக் கல்லாக்கினார். பின்பு ராமனால்[அபூர்வச் சக்தி படைத்த இவன் பெயரால்தான் இங்கே ‘ராம ராஜ்ஜியம்’ அமையப்போகிறது!] https://www.vikatan.com/news/miscellaneous/20298-


*காசியபர்:

இவர் அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை,சுரபி, தாம்ரா, குரோதவசை, பதங்கி, யாமினி ஆகியோரை மணந்தவர்[இதோடு திருப்தி கண்டிருப்பாரா இவர்?!]

https://www.wikiwand.com/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%

AE%AA%E0%AE%B0%E0%AF%8D].


*வசிஸ்டர்:

இவரைப் பிரம்மாவின் மகன் என்கிறது ராமாயணம்

[https://temple.dinamalar.com/news_detail.php?id=2509].


*விசுவாமித்திரர்:

ரம்பை தன் தவத்தைக் கலைக்க வந்தவுடன், இவர்[விச்வாமித்திரர்]

கோபத்தால் அவளைச் சபிக்கிறார்[அருமையான வாய்ப்பை நழுவவிட்ட கிறுக்குச் சாமியார்!]. பின்னர் மனம் வருந்தித் தன் மூச்சையும் பேச்சையும் அடக்கி

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டு தவம் செய்கிறார்[!!!].[https://valmikiramayanam.in/?p=38]

==========================================================================

***அலைபேசியில், தொடர்கள்[பிற்பகுதி] சரிவர அமையவில்லை;

காரணம் புரியவில்லை.