பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 2 பிப்ரவரி, 2023

‘பாஜக’வின் சூழ்ச்சிக்குப் பலியாவாரா ‘ஓபிஎஸ்’?!

ரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன்னுடைய அணியின் வேட்பாளரை அறிவித்ததோடு, ‘ஓபிஎஸ்’, “பாஜக சார்பில் நல்லவேட்பாளர் நிறுத்தப்பட்டால், எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம்” என்று கூறி, தான் ‘பாஜக’ எஜமானர்களுக்கு ஊதியம் இல்லாத முழுநேர அடிமை என்பதைப் பறையறைந்து சொல்லியிருக்கிறார்.

பாஜக போட்டியிடவில்லை என்றால், நிச்சயம் எங்களின் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.


வேட்பாளர் செந்தில் முருகன் லண்டனில் எம்பிஏ படித்தவர் என்பதால், அவருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் நம்புகிறார்.


பாவம் ‘ஓபிஎஸ்’! அவரின் ‘நம்பிக்கை பலிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

'பாஜக'வினர் தங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்தப்போவதுமில்லை; இவருடைய வேட்பாளரை ஆதரிக்கப்போவதும் இல்லை.

“2024இல் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இப்போதிருந்தே முனைப்புடன் செயல்படவே விரும்புகிறோம். ’ஈரோடு கிழக்கு’ இடைத் தேர்தலில் நாங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே” என்று அவர்கள் அறிவிக்கப்போகிறார்கள்.

பன்னீர் ரொம்பவே அப்பாவி; அதிர்ந்து பேசாதவர்; வல்லவரல்ல எனினும் நல்லவர்; மிக மிக மிக மென்மையானவர்; பயந்த சுபாவி.

ஆகவே, அண்ணாமலையார் மூலம் மேற்கண்ட[வெறும் பார்வையாளர்] அறிவிப்பு வெளியாகும்போது, ‘ஓபிஎஸ்’ எனப்படும் ‘ஓபசெ’ அவர்களுக்கு உடனிருந்து ஆறுதலும் தேறுதலும் சொல்லி, ‘ஓபிஎஸ்’ஐத் தங்கள் கட்சியில் சேர்க்க அவர்கள் கையாளவுள்ள ‘மிரட்டல், உருட்டல், தாஜா செய்தல்’ போன்ற சூழ்ச்சிகளுக்கு அவர் பலியாகிவிடாமல் பாதுகாப்பதும், தமிழ் மொழிப் பற்றையும் தமிழின உணர்வையும் மழுங்கடிப்பதையே முழுநேரப் பணியாகச் செய்யும் ‘பாஜக’வில் சேருவது என்ற தப்பான முடிவுக்கு அவர் வந்துவிடாமல் தடுப்பதும் அவரை உண்மையாக நேசிக்கும் தொண்டர்களின்[10 பேர் ஆயினும்] கடமையாகும்!

வாழ்க ‘ஓபிஎஸ்’! வளர்க அவரின் தமிழினப் பற்று!!

==============================================================================