‘உத்தரபிரதேச மாநிலம் சகரன்பூரில் உள்ள ‘தாருல் உலூம் தியோபந்த்’ என்ற இஸ்லாமிய செமினரி[இறையியல், மதம், வரலாறு தொடர்பான கல்வியை வழங்கும் ஒரு சிறப்புப் பள்ளி], தாடியை முழுவதுமாக மழித்தலை அல்லது கத்தரித்தலைச் செய்ததற்காக நான்கு மாணவர்களை வெளியேற்றியுள்ளது’ -இது நேற்றையச் செய்தி.
தாடி இல்லாத புதியவர்களும் மாணவர்களாகச் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.
"இஸ்லாத்தில், ஆண்கள் தங்கள் தாடியை ஒரு முஷ்டி நீளத்திற்கு வைத்திருக்க வேண்டும். அதை ஒரு முஷ்டி அளவுக்குக் கீழே வெட்டுவதும் மொட்டையடிப்பதும் தடைசெய்யப்பட்டவை[ஹராம்] என்பதோடு அவை மாபெரும் பாவச் செயலுமாகும்[அறுவை செய்ய நேரும்போது இதற்கு விதிவிலக்கு உண்டா?!] என்று கல்வித் துறைத் தலைவர் ’மௌலானா ஹுசைன் அகமது’ கூறினார்” என்பதும் அச்செய்தியின் உள்ளடக்கம் ஆகும்.
இந்த நடவடிக்கையை, தியோபந்த் நகரத்தில் உள்ள ஜாமியா ஷைகுல் ஹிந்தின் மௌலானா முஃப்தி ஆசாத் காஸ்மி ஆதரித்துள்ளாராம். freshers-without-beard/ar-AA17KqNx?ocid=msedgdhp&pc=U531&cvid=a88858d56b814a428127c28d38c9d30e
தாடியை அகற்றுவது பாவச் செயல் என்கிறார் இவர். இஸ்லாமியர்களிலேயே இதை மறுப்பவர்களும் உளர்.
‘குரானில் 114 அத்தியாயங்கள் 6346 வசனங்கள் உள்ளன. தாடி வைக்க வேண்டும் மீசையைச் சிரைக்க வேண்டும் என்று ஓரு வசனத்திலும் இல்லை.
இஸ்லாமிற்குக் குரான் மட்டுமே சட்டப் புத்தகம் - மற்றவை எல்லாம் மனிதனால் எழுதப்பட்டவை. அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்கிறார் ஒரு இஸ்லாமியர்{Syed Siraj [quora]}.
‘அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் – பெண்களும், ஆண்மையிலும் – பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. தாடி வைக்க, பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத்தான் செலவு ஏற்படும்.’ https://www.onlinepj.in/index.php/books/islamic-tamil-books/arthamulla_kelvikal
இது போன்ற வாதங்கள் மிக மேம்போக்கானவை.