அண்மையில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து உரையாடிய நிகழ்வு யாவரும் அறிந்ததே.
உரையாடலின்போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று இவர் கோரிக்கை வைக்க, தேர்வு தேவையே என்பதற்கான காரணங்களைச் சொல்லிக் கோரிக்கையை ஏற்க அவர்[மோடி] மறுத்தாராம்.
“நீட் தேர்வை நான் மட்டுமல்லாமல் எங்கள் மாணவர்களும் விரும்பவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்” என்று மோடியிடம் சொன்னாராம் இவர்.
இதுதான் நீட் தேர்வு பற்றிய ரகசியம் என்று உதயநிதி கூறியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
ஆக, ‘நீட்’டுக்காகத் தொடர்ந்து போராடப்போவதாக இவர் சொன்னதுதான் ரகசியம்’ என்பது அறியத்தக்கது.
இவர்[உதயநிதி] அப்படிச் சொன்னபோது, அவர்[மோடி] ஒட்டுமொத்த உடம்பும் வேர்த்து வழிய, வெட வெடத்து நடுநடுங்கியிருப்பாரா என்பது தெரியவில்லை.
“எங்கள் கட்சியின் சார்பாக ஊர்வலங்கள் நடத்துவோம்; உண்ணாவிரதம் இருப்போம். எங்கள் மக்களும் எங்களுடன் இணைவார்கள். இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன்னால் நாங்கள் நடத்தும் போராட்டத்தால் இ.ஒ.அரசின் செயல்பாடு முற்றிலுமாய் முடங்கிப்போகும். அப்போது வேறு வழியில்லாமல் நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்” என்று உதயநிதி சொல்லியிருந்தால் உண்மையிலேயே பிரதமர் நடுநடுங்கியிருக்கக்கூடும்.
அமைச்சர் உதயநிதி அவசரப்பட்டு அப்படியெல்லாம் சொல்லிவிடவில்லை.
தமிழ்நாடு அரசு நிறுவனங்களுக்கான(+தனியார்?) வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 75%[90?] ஒதிக்கீடு செய்வது[தேர்தல் வாக்குறுதி], வ.மா.தொழிலாளர் வருகையைக் கட்டுப்படுத்துவது[மக்கள் கோரிக்கை] போன்ற தலையாய கடமைகள்[சட்டம் இயற்றுதல்] நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கான போராட்டத்தைக் கலவரம் விளைவிப்பதற்கான போராட்டம் என்று பொய்க் குற்றம் சாட்டி, ஒன்றிய அரசு இந்த ஆட்சியைக் கலைத்துவிடக்கூடாது என்னும் முன்னெச்சரிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதனால்தான், “சட்டப் போராட்டத்தைத் தொடர்வோம்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி அவர்கள்.
சட்டப்போராட்டத்திற்கு[சட்டம் அவ்வளவு எளிதில் தீர்ப்பு வழங்கிவிடாது]க் காலவரையறை எல்லாம் இல்லை.
ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்கும்வரை போராடலாம். சட்டப்போராட்டம் எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால்.....
ஸ்டாலினுக்குப் பிறகு முதல்வராக ஆகவிருக்கும் உதயநிதி ஸ்டாலின் பதவியில் இருக்கும்வரை[காலவரையறை எல்லாம் இல்லை] போராடலாம்.
இங்குள்ள ‘பாஜக’வின் அடிமைகள் ஆட்சியைக் கைப்பற்றும்வரை போராடிக்கொண்டே இருக்கலாம். ஹி...ஹி...ஹி!!!