செவ்வாய், 14 மார்ச், 2023

‘புக்கர்’ பரிசுப் பரிசீலனைப் பட்டியலில் பேராசிரியர் ‘பெருமாள் முருகன்’ நாவல்!


#சர்வதேசப் புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் ‘பெருமாள் முருகன்’ எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. 

தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.


சர்வதேசப் புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்பட்டு வெளிவரும் சிறுகதைத் தொகுப்பிற்கோ, நாவலுக்கோ வழங்கப்படுகிறது.


பரிசைப் பெறும் நாவலுக்கு விருதுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும். அதைக் கதாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள்.


சர்வதேசப் புக்கர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அந்தப் பரிசுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாவல்களின் பட்டியல் வெளியிடப்படும். அது Longlist என அழைக்கப்படுகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெறுவதே, மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.#


இது, சற்று முன்னரான 'BBC' செய்தி.


* * * * *

தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவல் புக்கர் பரிசின் பரிசீலனைக்கான பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்று குறிப்பிடுகிறார் 'BBC' செய்தியாளர்.


‘பூக்குழி’[கல்கி இதழில் தொடராக வெளியானது] பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது என்பதால், இது குறித்துத் தமிழர் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்.


பேராசிரியர் பெருமாள் முருகன் புக்கர் பரிசை வென்றிட வேண்டும் என்பது நம் விருப்பம்.


வெல்வார் என்னும் நம்பிக்கையில் மனம் நிறைந்த பாராட்டினையும் வாழ்த்தினையும் இங்குப் பதிவு செய்கிறேன்.


மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குரிய பெருமாள் முருகன்.

=====================================================================================

https://www.bbc.com/tamil/articles/c80xly7wp96o