அண்மையில் உத்தரப்பிரதேசம் சென்று முதல்வர் ‘யோகியானந்த்’தைச் சந்தித்துத் திரும்பிய அனுபவத்தைத் தன் ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள வானதி சீனிவாசன்[பாஜக], யோகியிடம் கீழ்க்காணும் வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.
//தமிழகத்தில் பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, சம்பளப் பிரச்னை, மருத்துவச் சிகிச்சை, இறப்பு நேர்ந்தால் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லுதல் போன்றவை தொடர்பான உதவிகளைச் செய்ய, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உத்தரப்பிரதேச அரசின் சார்பில் 'உதவி மையம்' ஏற்படுத்தலாம் என்று நான் யோசனை தெரிவித்தேன். நல்ல யோசனை என்று பாராட்டுத் தெரிவித்த யோகியானந்த், இது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாகத் தெரிவித்தார்//
இதற்கு, இந்தப் பதிவுக்கான பின்னூட்டக்காரர்களே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படியொரு யோசனை, அயலவருக்குச் சேவகம் செய்வதன் மூலம் தன்னலம் பேணும் அடிமைகளின் களிமண் மண்டையில் மட்டுமே தோன்றும்[தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர்கள் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கெடுத்து அந்தந்த மாநில முதல்வர்களையெல்லாம் தேடிச் சென்று சந்தித்துக் கோரிக்கை வைப்பாரா அம்மையார்? உ.பி.தொழிலாளர் மீது மட்டும் இந்தக் ‘கருணாமூர்த்தினி’யான வானதிக்கு இத்தனைக் கரிசனம் ஏன்?!].
தமிழ்நாடு நம் மாநிலம். இதற்கென்று ஓர் அரசாங்கம் இருக்கிறது. இந்த அரசின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள். உ.பி. மாநிலத் தொழிலாளர் உட்பட, இங்கு வாழும் அனைத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதுமான கடமைகளை அவர் செய்கிறார்.
தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் அவர் கவனத்துக்குத்தான் கொண்டுசெல்லுதல் வேண்டும்.
அயல் மாநிலத்தவரான யோகியானந்திடம் வேண்டுகோள் வைத்தது மாபெரும் தவறு; அரசியல் சட்டத்திற்கு முரணானது.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் உ.பி.காரர்களுக்காக உதவி மையம் ஏற்படுத்தும் அதிகாரமும் யோகியானந்தனுக்கு இல்லை[மாநில அரசுகளிடம் அனுமதிபெற்றுத் தற்காலிகமாக அதைச் செய்யும் வாய்ப்பு அமைதல்கூடும்]. அவ்வாறு செய்வது.....
மற்ற மாநில அரசுகளை அவமதிப்பதான செயலாகும்.
இந்தச் சாதாரண ஒரு நடைமுறையைக்கூட அறிந்திராத வானதியம்மையாருக்கு எதற்குச் சட்டமன்ற உறுப்பினர் பதவி?
இவரைப் போலவே, இவரைத் தேர்ந்தெடுத்த அத்தனைக் கோவை வாசிகளும்கூட ‘பாஜக’வுக்குச் சேவகம் செய்து பழக்கப்பட்டவர்களோ?!
=====================================================================================