பருவப் பெண்களுக்கே உரிய உல்லாசக் கனவுகளிலும் கற்பனைகளிலும் மிதப்பது, சலனங்கள், சஞ்சலங்கள் என்று இனம் புரியாத உணர்ச்சிகளில் சிக்குண்டு விடுபட முடியாமல் தவிப்பது போன்ற பலவீனங்கள் இவளிடம் இல்லை.
இல்லாததால்தான், வகைதொகையில்லாமல், விதம்விதமான மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு இந்தச் சமுதாயம் சீரழிவது பற்றி இவளால் சிந்திக்க முடிந்திருக்கிறது.
சிந்தித்ததன் விளைவு…..
பெண் அடிமைத்தனம், சாதி வேறுபாடுகள், பிராமண ஆதிக்கம் போன்றவை வேரூன்றக் காரணமான மனுநூல்[மனுஸ்மிருதி] புத்தகத்தை எரித்து, எரிந்த தீயில் சிகரெட் பற்ற வைத்த அசாத்தியத் துணிச்சகாரியாகத் தலைநிமிர்ந்து நிற்கிறாள் ‘பாட்னா’ பெண்ணான இவள்.
நேற்றுவரை இந்த இந்திய மண் கண்டறியாத புரட்சிப் பெண் இவள்.
இவள், மனுநீதி நூலுக்குத் தீயிட்டு, எரியும் தீச்சுவாலையில் சிகரெட் பற்றவைத்த நிகழ்வு சமூகவலைதளங்களில் பரபரப்பூட்டியுள்ளது.
“மனு ஸ்மிருதி புத்தகம் எங்குமே இல்லை என்கிற நிலைமை உருவாகும்வரை போராடுவேன்” எனக் கூறியுள்ள இவளைப் போன்ற பகுத்தறிவுப் பெண் சிங்கங்கள் நம்மிடையே இல்லை என்பது வருத்தமளிக்கிறது. எனினும், இவளைப் போன்ற அசாத்தியத் துணிச்சல்காரிகள் இனியேனும் இங்குத் தோன்றுவார்கள் என்பது நம் திடமான நம்பிக்கை.
வாழ்க பெண்ணினம்! வளர்க பகுத்தறிவு!!
===============================================================================