தமிழில் பத்திரிகை வெளியிட்டு, தமிழால் பிழைப்பு நடத்திக்கொண்டு, தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் தீங்கு நேரும் வகையில் செய்தி வெளியிடுபவன் ‘தினமல[ம்]ர்க்காரன் என்பதை, அந்த இதழைத் தொடர்ந்து படிக்கும் தமிழர்கள் அறிவார்கள்.
வடமாநிலத் தொழிலாளர்களின் அளவு கடந்த வருகையால்[அது ஒரு வரம்புக்குள் இருந்திருந்தால் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பே இல்லை] தமிழ்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில்.....
வடமாநிலத்தவருக்கு வேலை வாய்ப்பை வழங்குபவர்கள் ‘தமிழ்த் தேசியத் தொழில் முனைவோர்’ என்பதால், அந்த அமைப்பினருக்கு, ‘நாம் தமிழர்’ கட்சியினர் கோரிக்க மனுவை அனுப்பியுள்ளனர்.
மனு:
//1. வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் அதிக அளவில் வேலைக்குச் சேர்வதால், தமிழர் வாரிசுகளின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும்.
2.நீங்கள் அவர்களுக்கு வழங்கும் சம்பளம், வடநாட்டிலுள்ள அவர்களின் குடும்பங்களுக்கே போய்ச்சேரும். தமிழ்நாட்டில் பணப்புழக்கம் குறையும். இதனால் விலைவாசி உயரவும் வாய்ப்புள்ளது.
3.உங்களின் சுய லாபத்திற்காக இந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்.
4.வட மாநிலத் தொழிலாளருக்கு வேலையே தரவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கும் வேலைவாய்ப்பு 10% ஆக இருக்கலாம்.
அதாவது, உங்களின் நிறுவனங்களில் ‘பணியமர்த்தல்’, மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு 90% ஆகவும், வட மாநிலத்தவருக்கு 10% ஆகவும் இருத்தல் வேண்டும்//
தொழில் அதிபர்களுக்கு ‘நாம் தமிழர் கட்சி’ விடுத்துள்ள கோரிக்கையில், ‘பணி வழங்குதல்’ தமிழர்களுக்கு 90 சதவீதமும், வடமாநிலத்தவருக்கு 10 சதவீதமும் இருத்தல் வேண்டும் என்று சொல்லியிருப்பதில்[‘அன்போடு வேண்டுகிறோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது] தவறேதும் இல்லை. இது தமிழர்களிடம் உள்ள உயர் பண்பின் அடையாளமும் ஆகும்.
இச்செய்தியை வெளியிட்டுள்ள தினமலர்க்காரனுக்கும் இது தெரியும். ஆனால், இச்செய்திக்கு அவன் கொடுத்துள்ள தலைப்பு என்ன என்பதை அறிந்தால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள்.
'தினமலர்'த் தலைப்பு:
‘90 சதவீதம் தமிழக தொழிலாளர்கள்: 10 சதவீதம் வெளி மாநில தொழிலாளர்கள் பணியில் அமர்த்த நாம் தமிழர் கட்சி மிரட்டல்’
நன்றியறிதலுக்கு நாயை உதாரணமாகச் சொல்வார்கள். நன்றி கொல்லும் குணத்திற்கு மிகப் பொருத்தமான உதாரணம்.....
‘தினமலர்’!
===========================================================================================================