சனி, 11 மார்ச், 2023

ஹோலிப் பண்டிகையா, காலிகள் நடத்தும் காமக்கூத்தா?!

சந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வட மாநிலங்களில் ஹோலிப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம்.

இந்த ஆண்டு ஹோலி மார்ச் 8ஆம் தேதியான மகளிர் தினத்தன்று தொடங்கியது. மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் கலர்ப் பொடிகளைத் தூவியும், பூசியும் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்களாம்.


அப்புறம் என்னவெல்லாம் நடந்தது?


கலர் பவுடர்களைப் பூசுகிறோம் என்கிற பெயரில் பெண்களின் உடல் பாகங்களைத் தொடுவது போன்ற அநாகரிகச் செயல்கள் அரங்கேறியுள்ளன.


ஜப்பான் நாட்டுப் பெண் ஒருவரின் தலையில் முட்டையை உடைத்தும் கழுத்து, இடுப்பு என்று பல அந்தரங்க இடங்களில் கலர்ப் பவுடரைத் தடவியும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்த அந்தப் பெண் அங்கிருந்து எப்படியாவது தப்பினால் போதும் என்று விலகி நடக்க முயன்றிருக்கிறார். 


ஒருவன் அப்பெண்ணின் அந்தரங்கப் பகுதியில் கலர்ப் பவுடரைப் பூசியுள்ளான்.


உடனே அப்பெண் அவன் கன்னத்தில் அறைந்துள்ளார்[இந்த அறைதல், காலிப்பயலின் கன்னத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனின் கன்னத்தில் மட்டுமல்ல, மோடி, அமித்ஷா ஆகியோர் கன்னங்களிலும் விழுந்திருக்கும் என்பதை நாம் உணர்தல் வேண்டும்].


இதனையடுத்து,

கைகளைக்கொண்டு உடலை மறைத்தவாறு அப்பெண் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்; இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்ட நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விடியோ குறித்து விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்குப் பரிந்துரைத்ததாம்.


இத்தகவல்கள், புதிய தலைமுறை, தினத்தந்தி, ’தமிழ் ஒன் இண்டியா’ போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் பகிரப்பட்டுள்ளன.


ஊடகங்கள், காமக் களியாட்டம் நடத்திய காலிகளில் பிஞ்சில் பழுத்த[சிறுவர்] கழிசடைகளும் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. பிஞ்சில் வெம்பிப் போனவன்களே இப்படியென்றால், திணவெடுத்து வெறியேறித் திரிந்த தடியர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்தார்களோ?


இந்த ஒழுக்கசீலர்களைத்தான்["இங்குள்ளவனெல்லாம் யோக்கியன்களா?” என்று ஜெயரஞ்சன் போன்றவர்கள் முணுமுணுக்கக்கூடும்] இரு கரம் குவித்துக் கும்பிட்டு “வாங்க... வாங்க” என்று வரவேற்றுப் புகலிடம் தருகிறோம்.


வசதிவாய்ப்புகளைப் பெற்ற பிறகு இவர்களும் ஹோலிக் கூத்துகளை இங்கு கொண்டாடுவார்கள்.


எதிர்த்து நாம் குரல் எழுப்பினால்.....


“இது இந்தியா. இந்தியக் குடிமகனுக்கு எங்கு வேண்டுமானாலும் ஹோலிகூத்து நடத்த உரிமை உள்ளது” என்று நம் மண்டையில் அடித்துத் தேசத் துரோகிப் பட்டம் சூட்டுவார்கள்.


இனி இங்கே இதுவும் நடக்கும்; எதுவும் நடக்கும். இது பிடிக்காதவனெல்லாம் வாயை மட்டுமல்ல, ..... ஐயும் மூடிக்கொண்டு உள்ளுக்குள் முணங்கிக்கொண்டிருக்கலாம்.


இது ஒரே நாடு! ஒரே இனம்! ஒரே மொழி! ஒரே கலாச்சாரம்! ஒரே கட்சி ஆட்சி!


வாழ்க பாரதம்!!

* * * * *

தொடர்புடைய காணொலி:


video:

https://twitter.com/i/status/1634045266591399937 [copy & paste]