செவ்வாய், 7 மார்ச், 2023

பூச்சாண்டி காட்டும் அரசியல் புரோக்கர் ‘பிரசாந்த் கிஷோர்’!!!


 //பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர் தமிழ்நாடு வந்து திருப்பூரிலும் சென்னையிலும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து விசாரித்தனர். அப்போது, “தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என அவர்கள் அதிகாரிகள் குழுவினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, தொடர்ந்து வதந்தி பரப்புவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்// என்பது ஊடகச் செய்தி.

தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிற இந்தச் சூழலில் அரசியல் புரோக்கரும், ‘பீகாரி’ இனப்பற்றாளருமான[தமிழ்நாட்டில் இனப்பற்று குறித்துப் பேசினால், ‘தேச விரோதி’, ‘தேசத் துரோகி’ என்றெல்லாம் சகட்டு மேனிக்குச் சாடுகிறார்கள்] ‘பிரசாந்த் கிஷோர்’  என்பவர்,

‛‛தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என்பது போலி வீடியோக்கள் என துணை முதல்வர் கூறியுள்ளார். இதில் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன். இந்த விஷயத்தில் சில பத்திரிகையாளர்கள் தவறான வீடியோக்களைப் பகிர்ந்ததை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் உண்மையில் நடக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது'' என்று கூறியுள்ளார்.

இதனால், பெருமளவில் அடங்கத் தொடங்கிவிட்ட பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் என்பது 100% உறுதி.

எனவே,

அண்ணாமலை[பாஜக] அவர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கெடு விதித்ததுபோல், இவருக்கும் 24 மணி நேரம் நம் தமிழின அரசு அவகாசம் கொடுத்து உடனடியாக அவரிடம் உள்ள வீடியோக்களை வெளியிடுமாறு வலியுறுத்த வேண்டும்.

வீடியோவில் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால், முறையானதும் முழுமையானதுமான விசாரணக்குப் பிறகு குற்றம் புரிந்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமானது.

வீடியோவைப் பிரசாந்த் கிஷோர் வெளியிடவில்லை என்றாலோ, வெளியிட்டும், அதில் நம்மவர் குற்றம் புரிந்ததற்கான போதிய ஆதாரம் இல்லையென்றாலோ தமிழ்நாடு அரசு இந்த அரசியல் புரோக்கரைக் கைது செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உடனடித் தேவை ஆகும்.

=====================================================================================

https://tamil.oneindia.com/news/patna/political-strategist-prashant-kishor-on-alleged-attacks-on-migrant-workers-in-tamil-nadu/articlecontent-pf874805-501814.html

* * * * *

அண்மைச் செய்தி!

//''திமுக ஆட்சியை அகற்றச் சதி'' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு// 

https://www.hindutamil.in/news/tamilnadu/956700-mk-stalin-has-accused-that-there-is-a-conspiracy-to-

remove-the-dmk-government.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign

=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMw8M6oAQ&utm_content=rundown