தமிழ்நாட்டில், வட மாநிலத் தொழிலாளர் பிரச்சினை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் தமிழ்நாடு முதல்வர் ஈடுபட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில்,
“தமிழ்நாடு மக்களை வஞ்சிக்காதே” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட தட்டிகளை ஏந்தியவாறு, சேலம் அரசு சட்டக் கல்லூரி மாணவர் இருவர்[பரத்ராம், ராஜேஷ்] உள்ளிருப்புப் போராட்டதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும்.....
அவர்கள் தமிழ்நாடு அரசிடம் முன்வைத்துள்ளதொரு கோரிக்கை, வ. மா. தொழிலாளர் பிரச்சினையில், முதல்வருக்குப் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.
//வட மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் ‘உள்நுழைவு அனுமதிச் சீட்டு’ வழங்கப்படுதல் வேண்டும்// என்பதே அந்தக் கோரிக்கை.
கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்து, சேலம் மணியனூரில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது செய்தி. https://www.hindutamil.in/news/tamilnadu/956219-two-law-college-students-are-protesting-on-north-indian-issue-in-salem.html