வியாழன், 16 மார்ச், 2023

ஹெச்.ராஜாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தது சிறுபிள்ளைத்தனம்!!!

//இன்று மாலை திண்டிவனத்தில் அனுமதி பெறாமல் நடைபெறவிருந்த ’பாஜக’வின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடியிலிருந்து காரில் வந்துகொண்டிருந்த ஹெச். ராஜா[பாஜக] என்னும் நபரைக் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர்// என்பது நேற்று[15.03.2023-https://tamil.samayam.com/] வெளியான பழைய செய்தி.

அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள் என்பதும், அனைவரும் ராமநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் கூடுதல் செய்தி.


மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதை வைத்து, எச்சி.ராஜா உட்பட அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்பதை மிக எளிதாக அனுமானம் செய்யலாம்.


இந்த ஆளின் தராதரம் ஊரறிந்தது; உலகறிந்தது.


வாய்கூசாமல் கவிஞர் வைரமுத்துவின் தாயை விபச்சாரி என்றவன்ர்[நாகரிகம் கருதி ஒருமையில் சாடுவது தவிர்க்கப்படுகிறது].


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பிறப்பைக் கொச்சைப்படுத்தியவர். 


நட்டநடுச் சாலையில் நின்றுகொண்டு உயர் நீதிமன்ற நீதிபதியைப் பற்றி அசிங்கமாகப் பேசியவர்.


இம்மாதிரி, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கவேண்டியவன்ர் இந்தக் கழிசடை.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவரைப் போன்றவர்களைக் கைது செய்து மண்டபங்களில் அடைத்துவைத்துச் சிற்றுண்டி, தேனீர் எல்லாம் கொடுத்து உபசரிப்பது இவர்களைக் கவுரவிக்கும் மிகத் தவறான செயலாகும்.


அதனால்தான் சொல்கிறோம், இனியும் இந்த ஆசாமியை முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னும் பெயரில் கைது செய்வது, சிறுபிள்ளைகளின் விளையாட்டை[சிறுபிள்ளைத்தனம்] ஒத்தது என்பதால் அதைச் செய்யாதீர் என்று.

===================================================================================

தொடர்புள்ள காணொலி:


===============================================================================================