வெள்ளி, 17 மார்ச், 2023

பாதிரியின் சல்லாபமும் கில்லாடித் திருடர்களின் வல்லாண்மையும்!!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார்[‘யார்’ தேவையா?] பெனெடிக் ஆண்டோ என்பவர், தேவாலயத்துக்கு வரும் பெண்களை, குறிப்பாகக் கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாசமாக வீடியோகால் பேசி[இன்னும் என்னவெல்லாம் செய்தாரோ?] அவ்வப்போது ஆனந்தப் பரவசத்தில் திளைத்ததோடு, வசதி படைத்த பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டியும் இருக்கிறார்.

தங்களின் மானமும் மரியாதையும் கெட்டுவிடக்கூடாது என்று அஞ்சிய பெண்கள் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தும் இருக்கிறார்கள். வசதி இல்லாதவர்கள் கர்த்தரிடம் முறையிட்டிருக்கக்கூடும்.

கர்த்தர் கண்டுகொள்ளவில்லையோ என்னவோ, வசதி இல்லாத பெண்களில் ஒருத்தி காவல்துறையினரிடம் புகார் செய்ய, அவர்களும் பாதிரி மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

கிறித்தவத் தேவாலயத்தின் ‘பாதிரியார்’ என்பது கௌரவம் மிக்க பதவி என்பதால், பாதிரி குற்றம் செய்ததற்கான ஆதாரங்களைத் திரட்டி அவரைக் கைது செய்வது காவல்துறைக்கு அத்தனை எளிதல்ல.

இந்த நிலையில், சில மர்ம நபர்கள் பாதிரியைத் தாக்கி, அவருடைய கணினியைத் திருடினார்கள்.

பாதிரியின் லீலைகள் அதில் பதிவாகியிருக்கும் என்று அனுமானித்துதான் அவர்கள் அதைத் திருடியிருக்கிறார்கள்[சில நேரங்களில் சில திருடர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்களே]; அவரின் அந்தரங்க லீலைகளைக் காணொலியாக்கி[வீடியோ]ச் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். விளைவு.....

பாதிரியின் காமக் களியாட்டங்கள் குறித்து மக்கள் கதை கதையாகப் பேசுகிறார்களாம்.

காணொலியைச் சம்பந்தப்பட்ட பாதிரியும் பார்த்திருக்க வேண்டும். காவல்துறையிடம் சிக்கிக்கொள்ளாமலிருக்கத் தலைமறைவாகிவிட்டார்.

காவலர்கள் அவரைக் கண்டுபிடித்துக் கைகளில் விலங்குபூட்டுவதற்கு வெகு நாட்கள் தேவைப்படாது.

தமிழ்நாடு காவல்துறை 'ஸ்காட்லேண்ட் யார்டு[Scotland Yard] போலீசுக்கு நிகரானதாக்கும்! 


                                                       *   *   *   *   *

மேற்கண்ட 'tamil.oneindia' செய்திக்கான பின்னூட்டங்களில் கீழ்க்காண்பதும் ஒன்று:

//Murali 7h

இதே ஒரு இந்து சாமியார்னா எல்லா போலி சமூக ஆர்வலர்களும் வாய் கிழிய பேசியிருப்பாங்க, மீடியா விவாதம் நடத்திருக்கும், ஏன்? முதலமைச்சர் கூட கூட்டம் போட்டு பேசியிருப்பார். தலைமறைவு, கல்லில் ஃபர்ஸ்ட் கிளாஸ் சிறை, பிறகு காப்பாற்றப்படுதல் என எல்லாம் இவனுக்கு நடக்கும்.//


‘முரளி’கள் இனியும் இம்மாதிரியான குற்றங்களைச் சுமத்தமாட்டார்கள் என்று நம்புவோம்!

=================================================================================================

https://tamil.oneindia.com/news/kanyakumari/complaint-against-kanyakumari-priest-after-leak-of-sex-videos/articlecontent-pf880786-503274.html  -17.03.2023