வெள்ளி, 14 ஏப்ரல், 2023

‘கமலக்கண்ணி’[Kamalakanni] நம் இதயக்கனி!!!

‘மாரடைப்பு வருமா? நடுக்குவாதம் தாக்குமா? பக்கவாதம் முடக்கிப்போடுமா? சாவு எப்போது நம்மைச் சவக்குழிக்கு அனுப்பும்?’ 

வயது ஏற ஏற என்றிவ்வகையான பயமும் கவலையுமே மனிதர்களின் ஆயுளில் கணிசமான ஆண்டுகளைக் கபளீகரம் செய்துவிடுகின்றன.

'அச்சப்படுவதாலும் கவலைக்குள்ளாவதாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை. வருவது வந்தே தீரும். நடப்பது நடந்தே தீரும்.  ஏற்று வாழ நம்மைத் தயார் செய்துகொள்வதே புத்திசாலித்தனம்' என்று சொல்லி மனதைத் தேற்றிக்கொள்ள முயல்கிறோம்.

ஆனால், இம்மாதிரியான ஆறுதல் மொழிகளாலும் நிலையாமைத் தத்துவங்களாலும் நோய் குறித்த அச்சத்தையும் மரண பயத்தையும் அலட்சியம் செய்து வாழ்ந்துமுடிப்பது அத்தனை எளிதல்ல.

இது எளிதல்ல என்பதால்தான், 100 ஆண்டு வாழ்க்கை நம்மில் மிக மிக மிகப் பெரும்பாலோருக்கு வாய்ப்பதே இல்லை.

இந்நிலையில், மேம்பட்ட கல்வியறிவோ, தத்துவ ஞானமோ வாய்க்கப்பெறாத வெகு சாமானிய மக்கள் ஆண்டுகள் நூறைக் கடந்தும் வாழ்வதைக் காணும்போது வியக்கிறோம்; புகழ்கிறோம்; போற்றுகிறோம்.

அவ்வாறு நாம் ஏற்றிப் போற்றிப் பின்பற்றி வாழ்வதற்குரிய மனிதர்களில், தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்து வாழும் கமலக்கண்ணி[Kamalakanni]யும் ஒருவர்.

சிறிதளவு ஆரம்பக் கல்வி மட்டுமே பெற்ற இவர், நோய்கள் குறித்தோ, மரணம் குறித்தோ கவலைப்படாமல் மிகப் பல ஆண்டுகள் கேரள மாநிலத்தில் ஏலக்காய் வயல்களில் வேலை செய்தவர்.

இவரின் மனத் திண்மைதான் இவரை 108 வயதிலும் தெம்போடு கேரள மாநிலத்தின் எழுத்தறிவுத் திட்டத்தில் பங்கேற்றுக் கல்வி கற்கச் செய்திருக்கிறது.

இவரைப் பற்றிய விரிவான தகவல்கள் கீழ்க்காணும் முகவரியில் இடம்பெற்றுள்ளன.

=========================================================================