வியாழன், 13 ஏப்ரல், 2023

காமக் கொடூரி!!![காமக் கொடூரனுக்கு எதிர்ச்சொல்]

வளுக்கு உடம்பெங்கும் காமம். தீராத உடலுறவுத் தாகம்.

தணியாத தாபத்தைத் தணிக்க ஒரு காமுகன் தேவைப்பட்டான்.


கணவனும் மாமனார் மாமியார் ஆகியோரும் அப்பாவிகள் என்பதால் அப்படியொருவனை அவளால் மிக எளிதாகத் தேடிக்கொள்ள முடிந்தது.


அவர்கள் மூவரும் இடையூறாக இருந்ததால், நாளெல்லாம் இடையீடு இல்லாமல் இன்பம் துய்ப்பது இயலாமல்போனது.


மாமனார்&மாமியார் பெயரிலுள்ள சொத்தை அபகரித்துக்கொண்டு, ஆசைநாயகனுடன் வெளியூர் சென்றுவிடத் திட்டம் தீட்டினாள் அவள்.


அவர்களைத் தீர்த்துக்கட்டினால்தான் அது சாத்தியப்படும் என்று நம்பினாள்.


தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள்.


அன்று…..


கணவன் பணியகம் சென்றிருந்தான். அவனின் அப்பாவும் அம்மாவும் கடைவீதி சென்றிருந்தனர்.


கள்ளக் காமுகனை அழைத்தாள் அந்தக் காமாந்தகி.


அவனும் அடியாளுடன் வந்தான்.


அப்புறம்?


‘அப்புறம் என்ன, வீடு திரும்பிய மாமனாரையும் மாமியாரையும் 

கழுத்தறுத்துக் கொல்ல வைத்தாள் அந்த மா பாதைகி’.....


என்று கதை முடிவதாகத்தான் உங்களைப் போலவே நானும் நினைத்தேன்.


ஆனால், அதற்கு இடைப்பட்ட வேளையில்தான் அந்த உலகமகா அதிரச... அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்தது.


அது…..


அடியாளை மாடியில் விட்டுவிட்டு, சல்லாபக் கலையில் கில்லாடியான கள்ளக் காமுகன் மட்டும் கீழ்த்தளம் வந்து ஆசைநாயகியுடன் அந்தரங்க லீலையில் ஈடுபட்டான்! https://www.thanthitv.com/latest-news/father-in-law-mother-in-law-covered-in-blood-in-the-morning-whatsapp-message-that-shocked-the-police-179586 [முகவரிக்குள் ‘காணொலி’ உள்ளது].


ட்டிய கணவனுக்குத் துரோகம். மாமனாரையும் மாமியாரையும் சற்று நேரத்தில் தீர்த்துக்கட்டும் திட்டம். கீழே நடக்கவிருப்பதை மேலே இருந்து அனுமானிக்கும் அடியாளின் மனவோட்டம்.


இவை பற்றிய நினைப்பால் ஏற்படும் கடும் பதற்றத்துக்கிடையே அவனுடனான அந்தரங்க லீலைக்கு அவள் சம்மதித்தது எப்படி?


கருணாமூர்த்தியான கடவுளின் படைப்பில் இப்படியும் பெண்களா?!


ஐயகோ!!!


 *   *   *   *   *


***கொஞ்சம் நாட்களுக்கு முன்பு, தான் பெற்ற மகளுடன் உறங்கிக்கொண்டிருந்த ஆடவன் ஒருவன், சற்றுத் தள்ளி, கள்ளக் காமுகனுடன் தன் மனைவி புணர்ச்சி சுகத்தில் மூழ்கிக்கிடந்ததை அறிந்தான்: அவளைத் திட்டினான். அவள் அவனைக் காமுகனின் உதவியுடன் அடித்துக் கொன்ற ஒரு கொடூர நிகழ்வு நினைவுக்கு வருகிறது[வெளியிட மனம் ஒப்பாததால் வரைவில் இடம்பெற்றிருந்த பதிவை அழிக்க நேரிட்டது].

=========================================================================