பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 3 ஏப்ரல், 2023

அரை லூசு அண்ணாமலை[பாஜக]!!!

டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்துக் கேள்வி எழுப்பினர். “தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று அமித்ஷா தெரிவித்தார். 

அமித்ஷாவின் கருத்து குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில்:

‛‛இதற்குத்தான் இந்தி படிக்க வேண்டும். அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும். இந்தியை முழுமையாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டிருக்க வேண்டும்.”

நிருபர்கள் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதும், அவர் பதிலளித்ததும் நமக்கு ஒரு பொருட்டல்ல. அவர் தன் இந்தி மொழிப் பற்றை உரிய நேரங்களில் உரிய முறைகளில் வெளிப்படுத்திக்கொள்வது பற்றியும் நமக்குக் கவலையில்லை.

அமித்ஷா என்ன பேசினார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்காக இந்தி படிக்க வேண்டும் என்று கூறியிருப்பதுதான் நம்மைச் சினம் கொள்ளத் தூண்டுகிறது.

நாம் அண்ணாமலையிடம் கேட்க நினைப்பது, “அமித்ஷா பேசும்போதெல்லாம் அதைப் புரிந்துகொள்ள இந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா? அவர் பேச்சைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ துல்லியமாகப் பிழையேதுமின்றி மொழியாக்கம் செய்யும் திறன் ஊடக நிருபர்களுக்கு இல்லையா?” என்பதுதான்.

தமிழ்மக்கள் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள். அதற்கான வலுவான காரணங்களை மொழியியல் அறிஞர்களும், தாய்மொழிப் பற்றாளர்களும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தித் திணிப்பு அவசியம் என்று இவர் கருதினால், அதற்கான மிகச் சரியான காரணங்களை எடுத்துரைக்கலாம்.

மாறாக, போகிறபோக்கில், அமித்ஷா பேச்சைப் புரிந்துகொள்ள இந்தி படிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, இந்தி வெறியர்களின் நிரந்தர அடிமை இவர் என்பதை அறியப்படுத்துகிறது.

எதைப் பற்றியும் எப்படியும் உளறிக்கொட்டுபவர் இவர் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அந்த உளறல் எந்த அளவுக்குத் தமிழர்களைக் காயப்படுத்துகிறது என்பது பற்றி இவர் கவலைப்பட்டதே இல்லை.

இவர் நடத்தும் இந்த இன வெறுப்பு அரசியல்தான், இவரைப் ‘பாஜக’ கட்சியின் மாநிலத் தலைவராக்கியிருக்கிறது என்பதை நம் மக்கள் ஒருபோதும் மறந்துவிடுதல் கூடாது.

====================================================================================

https://tamil.oneindia.com/news/chennai/bjp-chief-annamalai-says-about-amit-shah-admk-alliance-speech-and-request-to-need-to-learn-hindi/articlecontent-pf890321-505623.html