குறிப்பிட்டதொரு தீராத நோயால் பாதிக்கப்பட்டவரைக் குணப்படுத்த முடியாதபோது, அவர் தினம் தினம் வேதனையால் துடிப்பதைத் தடுக்கும் வகையில் அவரைக் கருணை கொலை செய்ய, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அரசிடம் அல்லது நீதிமன்றத்திடம் அனுமதி கோருவது நடைமுறையில் உள்ளது[On 9 March 2018 the Supreme Court of India legalised passive euthanasia by means of the withdrawal of life support to patients in a permanent vegetative state... மூளைச் சாவு அடைந்தவர்களுக்கு வென்டிலேட்டரை அணைக்க முடியும்...]
ஆனால், கருணைக் கொலைக்கு அனுமதி வழங்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்போரும் உள்ளனர். கருணைக் கொலை என்னும் பெயரில், வேண்டாத குடும்ப நபர்களைக் கொலை செய்வதும் நடபெறக்கூடும் என்பதே இதற்கான முக்கியக் காரணம்.
இங்கு, க.கொலைக்கு அனுமதி கிடைப்பது எளிதல்ல என்பதால், சம்பந்தப்பட்ட குடும்ப நபர்கள், மருத்துவத் துறையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஆட்களின் உதவியை நாடுவதும், அவர்கள் பணத்துக்காகக் கருணைக் கொலையை ஒரு தொழிலாகச் செய்வதும் நடைமுறையில் உள்ளது[இத்தொழிலில், இருதரப்பினராலும் ரகசியம் காக்கப்படுவதால் இது பற்றிய செய்திகள் வெளிவருவதில்லை].
பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பத்தினரே இதைச் செய்கிறார்கள் என்பது அவ்வப்போதைய செவிவழிச் செய்தி.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில், கருணைக் கொலையைச் சிலர் சட்டவிரோதமாக செய்துவருகிறார்கள்(நாடெங்கும் இது பரவலான நிகழ்வாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இவர்கள் மீது மிகக் கடும் நடவடிக்கை தேவை) என்பது ஊடகச் செய்தி[https://ilakkiyainfo.com/; காணொலிகள் இணைக்கப்பட்டுள்ளன..
இதைச் செய்பவர்கள், இது ரகசியமாகச் செய்யும் கொலை என்பதால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் வரன்முறை இல்லாமல் பெரும் தொகையைக் கூலியாகப் பெறுவர் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
முதியோர்களையும், பிறர் உதவியை எதிர்பார்த்து வாழும் சாதாரண நோயாளிகளையும்கூட ‘வீண் சுமை’ என்று நினைக்கும் குடும்பத்தவர்கள், கருணைக் கொலை என்னும் பெயரால் சாகடிப்பது சர்வ சாதாரண நிகழ்வாக ஆகிவிட வாய்ப்புள்ளது.
எனவே, நடுவணரசு, இதற்கென உடனடியாகக் குழு அமைத்து ஆராய்வதும், கருணைக் கொலை செய்தற்குரிய நபர்களின் எண்ணிக்கையை ஒரு கணக்கெடுப்பின் மூலம் தோராயமாகவேனும் அறிவதும் மிக அவசியம்.
குழுவின் பரிந்துரைப்படி, தேவையான சட்ட நடவடிக்கைகளை[உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதாரமாகக்கொண்டு] மேற்கொள்ளலாம்.
அரசு மருத்துவமனைகளுடன், அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் கருணைக் கொலை செய்வதற்கான அனுமதியை[க.கொலை பற்றி முடிவெடுப்பதற்கான அதிகாரம் உட்பட] வழங்கினால், உரிய தருணத்தில் க. கொலையைச் செய்துமுடிப்பது சாத்தியப்படும்.
இதன் மூலம், கருணைக் கொலை என்னும் பெயரில் பரவலாகக் குற்றச் செயல்கள் நடப்பதை பெருமளவில் தவிர்க்க இயலும்.
இது மேலோட்டமான ஒரு பரிந்துரை மட்டுமே.
* * * * *
***கருணைக் கொலை[Euthanasia] என்பது உடல் வதையில் இருந்து மீள்வதற்காக ஒருவரின் உயிரைத் திட்டமிட்டு முடிவடையச் செய்தல் ஆகும். வதையா இறப்புத் தொடர்பான வரையறைகளும் சட்டங்களும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும் பெரும்பான்மை நாடுகளில் இதற்குச் சட்ட ஏற்பு இல்லை.
விக்சனரியில் கருணைக் கொலை என்னும் சொல்லைப் பார்க்கவும். |
வதையா இறப்பு சமூக, சமய, அரசியல், சட்ட, அறிவியல் நோக்கில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகவே இருந்துவருகிறது.
* * * * *