உலக அளவில் இறைச்சி உண்போர் அதிகரித்துவரும் நிலையில், விலங்கு, பறவை முதலான உயிரினங்களைக் கொன்று உண்பதற்கும் எதிர்ப்புத் தெரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.
இந்நிலையில்.....
அமெரிக்காவில் விலங்குகளின் உயிரணுக்களிலிருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது என்பது அண்மையில் வெளியான மிக நல்ல ஒரு செய்தி.
ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் செயற்கை இறைச்சியை விற்பனை செய்வதற்கு அமெரிக்க உணவு&மருந்துகள் நிர்வாகம் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இன்னொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால்,
சிங்கப்பூரில் கோழியின் உயிரணுவிலிருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை இறைச்சி, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டு, விற்பனையில் சக்கைப்போடு போடுகிறதாம்.
விரைவில், மரபணுக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடு, மாடு, பன்றி, பாம்பு, மீன், மான் என்று உண்ணுவதற்கு ஏற்ற அனைத்து உயிரினங்களின் இறைச்சிகளும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால்.....
இவையெல்லாம் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாகவே, நம் மனிதக் குழந்தைகளுக்கான தாய்ப்பால் தயாரித்து விற்பனை செய்யப்படுவது மிக மிக முக்கியம்.
எனவே, அமெரிக்கா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல், செயற்கை உணவுகள் தயாரிக்கவுள்ள பிற நாடுகளும் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை!