அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 22 ஜூன், 2023

மூச்சுப் பயிற்சியும் ‘மோடி’[யைப்] பிரபலப்படுத்தும் யோகா பயிற்சியும்!!!


தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, மூச்சுக் காற்றைச் சீராக இழுத்துவிடுவது, உடல் நலத்திற்கான சிறந்ததொரு பயிற்சியாகும்.

இதனால் இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் சுறுசுறுப்பாக இயங்க இது உதவும்.

தினமும் இப்பயிற்சியைச் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியும்.

மூச்சுப் பயிற்சியால், ரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் மிகையான கொழுப்புகளும், ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகளும் கரைகின்றன.

மூளைவரை உயிர்க்காற்று[பிராணவாயு] பரவுகிறது. அதன் மூலம் மூளை சிறப்பாகச் செயல்படுகிறது.

மூச்சுப் பயிற்சியுடன் வேறு பல உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வதைத்தான் ‘யோகா’ என்கிறார்கள்.

வேறு பயிற்சிகள் எனப்படுவது, அமர்ந்த கோலத்திலோ, நின்ற நிலையிலோ கால்களை நீட்டி மடக்கியும், கைகளை உயர்த்தியும் இறக்கியும், முழு உடம்பையும் வளைத்தும் நெளித்தும் பக்கவாட்டுகளில் சுழற்றியும் செய்யப்படுபவை.

இவை உடற்பயிற்சிகளே தவிர, மூச்சுப் பயிற்சிக்கும் இவற்றிற்கும் சம்பந்தமே இல்லை.

உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்[உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள்] மூச்சுப் பயிற்சியை மட்டும் செய்யலாம்.

தேவை எனின், அளவான உடற்பயிற்சியும் செய்யலாம். அதாவது, இரண்டையும் தனித் தனியாகவோ இணைத்தோ செய்யலாம். உடம்புக்குத் தீமையும் விளைவிக்கிற யோகாவைத் தவிர்க்கலாம்.

"தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மனப் பதற்றம், மனச் சோர்வு போன்றவை நீங்குகின்றன” என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

இவற்றைப் பெறுவதென்பது ‘மனப் பயிற்சி’யால் மட்டுமே சாத்தியமாகும்.

மூச்சுப் பயிற்சி, மனப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் வேறு வேறானவை.

இவற்றாலும், நல்ல உணவுண்ணுவதாலும், வேறு நல்ல பழக்கவழக்கங்களாலும் விளைகிற அத்தனை நன்மைகளும் யோகா பயிற்சியால் கிடைக்கிறது என்று பரப்புரை செய்வது விரும்பத்தகாத செயலாகும்.

இந்தியப் பிரதமர் மோடி அதைத்தான் செய்கிறார்.

இவர் தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில்[நியூயார்க், ஐ,நா.தலைமையக வளாகம்] பயிற்சி முடிவில்.....

‘ஓம்’ மந்திரமும் சமஸ்கிருத சுலோகங்களும் ஒலிபரப்பப்பட்டனவாம்.

இவற்றுக்கும், இவர்களால் பரப்புரை செய்யப்படும் யோகா பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்?

சமஸ்கிருதம் தேவ பாஷை. அதிலுள்ள மந்திரங்களும் சுலோகங்களும் சக்தி வாய்ந்தவை என்று மக்களனைவரையும் நம்ப வைப்பதற்கான சூழ்ச்சி இது என்பதே நம் எண்ணம்.

* * * * *
***பெருமளவில் கொண்டாடப்படும் இந்த யோகாவால் கெடுதல்களும் உண்டாகின்றன. அவற்றுள் சில:

//அறுவைச் சிகிச்சை செய்து குணமடைபவர்களுக்கு, அல்லது காயங்களில் இருந்து மீண்டுவருபவர்களுக்கு யோகா தீங்கு விளைவிக்கிறது[குணமடைதலைத் தடுக்கிறது].

அஷ்டாங்க யோகா பயிற்சியாளர்களில் ஈடுபட்டவர்களில் 62 சதவீதம் பேர் தசை&எலும்புக் காயங்களால் அவதிப்படுவதுண்டு.

யோகா, நன்மைகளுக்கிடையே ரத்த அழுத்தம், முதுகுக் காயங்கள், தசைப் பிளவுகள், கிளவ்கோமா தொடர்பான பிரச்சினைகள், பக்கவாதம், நரம்புச் சேதம், கடுமையான காயங்கள் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆதாரம்: https://www.javatpoint.com/advantages-and-disadvantages-of-yoga//