யோகா | மோடி | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யோகா | மோடி | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜூன், 2026

‘யோகாப் பயிற்சி’... அம்மணச் சாமியார்[ஜட்டியுடன்] பாபா ராம்தேவ் இருக்க மோடி எதற்கு?!

//நாடு & கலாச்சாரங்களைக் கடந்து, உலக மக்களை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய சமூகக் கொண்டாட்டமாக யோகா மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்//[ஊடகச் செய்தி].

யோகா என்பது உடம்பை வலுப்படுத்துவதற்கும் நலப்படுத்துவதற்குமான ஒரு பயிற்சி மட்டுமே[மனதைப் பக்குவப்படுத்துவதாகச் சொல்வது சரியல்ல; அதற்கு முறையான மனப் பயிற்சிகள் தேவை].

இது உலக மக்களை இணைக்கும் கொண்டாட்டமாக மாறியுள்ளது என்கிறார் நம் பிரதமர் யோககுரு மோடி.

உலகில் பல நாட்டு மக்களும் யோகா கொண்டாடுவது வழக்கமாகியிருக்கலாம். இந்த வழக்கம் ஒட்டுமொத்த உலக மக்களையும் இணைத்துவிட்டதாகச் சொல்வது சரியல்ல.

நம் பரம்பரை எதிரியான பாகிஸ்தான் மக்களும்தான் யோகா பயிற்சி செய்தார்கள். நம் மக்களும் பாகிஸ்தான் மக்களும் இப்பொது ஒருங்கிணைந்து தங்களுக்குள் கொஞ்சிக் குலாவுகிறார்களா?

உலக மக்கள் அத்தனைப்பேரும் வயிறு பசித்தால் உணவு உண்ணுகிறார்கள்; உடல் பசிக்கு ஆணும் பெண்ணுமாகச் சேர்க்கை செய்கிறார்கள். இதனாலெல்லாம் உலக மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாய்ச் செயல்படுகிறார்களா என்ன?

நாட்டு நலன் குறித்து உருப்படியாய் ஏதும் பேசாமல் இப்படி எதையாவது உருட்டுவதே நம் பிரதமருக்கு வழக்கமாகிப்போனது.

இவரைத் தவிர, வேறு எந்த நாட்டுத் தலைவராவது யோகா பயிற்சிக்குத் தலைமை தாங்கிப் பல மணி நேரத்தை வீணடித்திருக்கிறார்களா?

அரையே அரைக்கால் அங்குல ஜட்டியோடு யோகா பயிற்சி தருவதற்கென்றே ‘பாபா ராம்தேவ்’, கவர்ச்சியான தாடி மீசையோடு சத்துக்குரு ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இருக்கும்போது, கணக்கிலடங்காத பணிகளைச் சுமந்துகொண்டிருக்கும் மோடிக்கு ஏன் இந்த வெட்டி வேலை[வீட்டில் பயிற்சி செய்வதே போதுமே]?

வியாழன், 22 ஜூன், 2023

மூச்சுப் பயிற்சியும் ‘மோடி’[யைப்] பிரபலப்படுத்தும் யோகா பயிற்சியும்!!!

தரையில் சப்பணமிட்டு அமர்ந்து, மூச்சுக் காற்றைச் சீராக இழுத்துவிடுவது, உடல் நலத்திற்கான சிறந்ததொரு பயிற்சியாகும்.

இதனால் இதயத்திற்குத் தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் சுறுசுறுப்பாக இயங்க இது உதவும்.

தினமும் இப்பயிற்சியைச் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தடுக்க முடியும்.

மூச்சுப் பயிற்சியால், ரத்தக் குழாய்களில் தங்கியிருக்கும் மிகையான கொழுப்புகளும், ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகளும் கரைகின்றன.

மூளைவரை உயிர்க்காற்று[பிராணவாயு] பரவுகிறது. அதன் மூலம் மூளை சிறப்பாகச் செயல்படுகிறது.

மூச்சுப் பயிற்சியுடன் வேறு பல உடற்பயிற்சிகளையும் சேர்த்துச் செய்வதைத்தான் ‘யோகா’ என்கிறார்கள்.

வேறு பயிற்சிகள் எனப்படுவது, அமர்ந்த கோலத்திலோ, நின்ற நிலையிலோ கால்களை நீட்டி மடக்கியும், கைகளை உயர்த்தியும் இறக்கியும், முழு உடம்பையும் வளைத்தும் நெளித்தும் பக்கவாட்டுகளில் சுழற்றியும் செய்யப்படுபவை.

இவை உடற்பயிற்சிகளே தவிர, மூச்சுப் பயிற்சிக்கும் இவற்றிற்கும் சம்பந்தமே இல்லை.

உடற்பயிற்சி செய்ய இயலாதவர்கள்[உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள் போன்றவர்கள்] மூச்சுப் பயிற்சியை மட்டும் செய்யலாம்.

தேவை எனின், அளவான உடற்பயிற்சியும் செய்யலாம். அதாவது, இரண்டையும் தனித் தனியாகவோ இணைத்தோ செய்யலாம். உடம்புக்குத் தீமையும் விளைவிக்கிற யோகாவைத் தவிர்க்கலாம்.

"தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மனப் பதற்றம், மனச் சோர்வு போன்றவை நீங்குகின்றன” என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

இவற்றைப் பெறுவதென்பது ‘மனப் பயிற்சி’யால் மட்டுமே சாத்தியமாகும்.

மூச்சுப் பயிற்சி, மனப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகிய மூன்றும் வேறு வேறானவை.

இவற்றாலும், நல்ல உணவுண்ணுவதாலும், வேறு நல்ல பழக்கவழக்கங்களாலும் விளைகிற அத்தனை நன்மைகளும் யோகா பயிற்சியால் கிடைக்கிறது என்று பரப்புரை செய்வது விரும்பத்தகாத செயலாகும்.

இந்தியப் பிரதமர் மோடி அதைத்தான் செய்கிறார்.

இவர் தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில்[நியூயார்க், ஐ,நா.தலைமையக வளாகம்] பயிற்சி முடிவில்.....

‘ஓம்’ மந்திரமும் சமஸ்கிருத சுலோகங்களும் ஒலிபரப்பப்பட்டனவாம்.

இவற்றுக்கும், இவர்களால் பரப்புரை செய்யப்படும் யோகா பயிற்சிக்கும் என்ன சம்பந்தம்?

சமஸ்கிருதம் தேவ பாஷை. அதிலுள்ள மந்திரங்களும் சுலோகங்களும் சக்தி வாய்ந்தவை என்று மக்களனைவரையும் நம்ப வைப்பதற்கான சூழ்ச்சி இது என்பதே நம் எண்ணம்.

* * * * *
***பெருமளவில் கொண்டாடப்படும் இந்த யோகாவால் கெடுதல்களும் உண்டாகின்றன. அவற்றுள் சில:

//அறுவைச் சிகிச்சை செய்து குணமடைபவர்களுக்கு, அல்லது காயங்களில் இருந்து மீண்டுவருபவர்களுக்கு யோகா தீங்கு விளைவிக்கிறது[குணமடைதலைத் தடுக்கிறது].

அஷ்டாங்க யோகா பயிற்சியாளர்களில் ஈடுபட்டவர்களில் 62 சதவீதம் பேர் தசை&எலும்புக் காயங்களால் அவதிப்படுவதுண்டு.

யோகா, நன்மைகளுக்கிடையே ரத்த அழுத்தம், முதுகுக் காயங்கள், தசைப் பிளவுகள், கிளவ்கோமா தொடர்பான பிரச்சினைகள், பக்கவாதம், நரம்புச் சேதம், கடுமையான காயங்கள் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஆதாரம்: https://www.javatpoint.com/advantages-and-disadvantages-of-yoga//