‘மந்திர உச்சாடனம்’, ‘பிராண பிரதிஷ்டை’, ‘உயிர்த்தன்மை உணர்தல்’, ‘ஆத்ம சாதனை’.
மேற்கண்ட நான்கு தொகுப்புச் சொற்களும்.....
கோவை, ஈஷா யோகா மையத்தில் உள்ள தியான லிங்க மண்டபத்தில், 24ஆம் ஆண்டு லிங்கப் பிரதிஷ்டை தினம் கொண்டாடப்பட்டது குறித்த செய்தியில் இடம்பெற்றவை.
இவை, ‘சத்குரு’ என்று உலகோர் பலராலும் கொண்டாடப்படுகிற ‘ஜக்கி வாசுதேவ்’ஆல் எடுத்தாளப்பட்டவை.
இவற்றிற்கான விளக்கங்கள் செய்தியில் இடம்பெறாத நிலையில், இவற்றிற்கு ஜக்கி தந்துள்ள விளக்கங்களை, 'isha.sadhguru.org' போன்ற தளங்களில் தேடினேன். கிடைத்த விளக்கங்களோடு, கிடைக்காதவற்றால் என் மரமண்டையில் உதித்த ஐயங்களையும் பதிவு செய்துள்ளேன்.
பதிவான விளக்கங்களை அரைவேக்காடு அறிவுள்ள என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். புரிந்தால்.....
நீங்களும் ஒரு ‘சத்குரு’தான்.
‘சத்குருவுக்குக் குரு’வாக மதிக்கப்படத்தக்க ஞானி என்றும் உங்களை விளித்துப் பாராட்டலாம்.
மந்திரம்:
//மந்திரம் என்பது ஏதோ பல வார்த்தைகளைப் போட்டுத் தொடர்ச்சியாகச் சொல்லக்கூடிய சொற்றொடர் அல்ல. அது, நமது எழுத்துகள் அல்லது அட்சரங்களில் உள்ள அதிர்வலைகளைப் பிரபஞ்சத்தில் உலாவவிட்டு நமக்குத் தேவையான பலன்களைக் கொடுக்கும் ஒரு முறை ஆகும்//[உச்சாடனம்: பேய் முதலான தீய சக்திகளை ஓட்டுவது > https://ta.wiktionary.org/s/7ga6]
பிரதிஷ்டை:
//"உரிய தொழில் நுட்பத்தின் துணையுடன், ஒரு சாதாரண வெளி அல்லது கல்லைக்கூடத் தெய்வீகச் சக்தியாக மாற்றிட முடியும். இதுதான் பிரதிஷ்டை எனும் அதிசயம்[பிராண பிரதிஷ்டை? பிராணன்>உயிர். உயிரைக்கூட பிரதிஷ்டை செய்ய முடியுமா? செய்து, அதைத் தெய்வீகச் சக்தியாக மாற்ற முடியுமா?]
உயிர்த்தன்மை உணர்தல்:
ஜக்கியின் விளக்கம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. உயிர் இருப்பதே அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத நிலையில், ‘உயிரின் தன்மை’ என்ன என்பது மட்டுமல்ல, அதை உணர்வதற்கான வழிமுறையும் புரிந்து தொலைக்கவில்லை.
ஆத்ம சாதனை:
‘ஆத்மா[ஆன்மா]’ இருப்பதாகச் சொல்கிறார்கள். அது சாதிக்குமா?
எதைச் சாதிக்கும்?
ஜக்கி மட்டுமே அறிவார்?
https://tamil.samayam.com/religion/hinduism/shiva-lingam-worship-secrets-shiva-lingam
-in-tamil/articleshow/72303902.cms?story=4