அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஒடிசா ரயில் விபத்தும் பேய்களின் ஓயாத அச்சுறுத்தலும்!!!

//டிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள், அடையாளம் கண்டறிவதற்காகப் பழமையான அரசுப் பள்ளி ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படவுள்ள நிலையில், குவியலாகப் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், பேய்கள் அங்கு நடமாடும் என்று அஞ்சி மாணவர்கள் அங்குச் செல்ல மறுத்தார்கள். 


அதே பயம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்கூட இருந்தது. புதிய கட்டடம் கட்டினால்தான் மாணவர்கள் பள்ளி செல்வது சாத்தியப்படும் என்று அவர்கள் அனைவரும் பிடிவாதம் பிடிக்க, கட்டடத்தைப் பார்வையிட்ட பாலசோர் மாவட்ட ஆட்சியர் புதிய கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.


புதிய கட்டடம் தயாரானதும், சடங்குகள் செய்து மாணவர்களின் அச்சம் அறவே நீங்கிய பிறகே அங்குக் கற்பித்தல் வழக்கம்போல் நடைபெறும் என்று பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


விளைவு…..


இடிக்கப்படும் ஒடிசா பள்ளி


கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது//


ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தது அதிர்ச்சி தரும் நிகழ்வு என்றால், பேய்களின் மீதான நம்பிக்கையில் ஒரு பள்ளிக் கட்டடம் அரசாங்கத்தால் இடிக்கப்படுவது பேரதிர்ச்சி தருவது மட்டுமல்ல, உலகில் இதுவரை நடைபெறாத அதிசயமும்கூட.


இத்தனை அடிமுட்டாள்கள் இந்த அறிவியல் யுகத்திலும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பது, அனைவரையும் வெட்கித் தலைகுனியச் செய்திடும் இழிநிலையாகும்.


இரவு நேரத்தில்தான் பேய்களின் நடமாட்டம் இருப்பதாகச் சொல்வார்கள். 

பட்டப்பகலில் பெரும் கூட்டமாகச் செல்வதற்கு ஏன் அஞ்ச வேண்டும்?


மாணவர்கள் இருக்கட்டும், அந்த ஊரிலுள்ள பொதுமக்கள் பெற்றோர்கள் என்று அத்தனை பேரும் மூடர்களாக இருப்பது வெட்கக்கேடாகும்.


தற்காலிகமாக, அந்தப் பள்ளிக் கட்டடத்தில் ஒரு டாஸ்மாக் கடையைத் திறந்து, முழுநாள்[இரவு&பகல்] விற்பனைக்கு அனுமத்தித்திருந்தால், குடிமகன்கள் அடிக்கும் கொட்டத்துக்குப் பயந்து ஒட்டுமொத்தப் பேய்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கக்கூடும்.


அல்லது,


‘இங்கு இயங்கிய பள்ளி வேறொரு இடத்திற்கு மாற்றப்படுகிறது’ என்று பொய்யான ஓர் அறிவிப்பை அரசு செய்திருந்தால், ‘கள்ளக் காமம்’ புரிவோரின் புகலிடமாக அது மாற, அங்கிருந்த பேய்கள் மாற்று இடம் தேடிக்கொண்டிருக்கும்.


பேய்களை விரட்டும் பூசாரிகளையோ மந்திரவாதிகளையோ வரவழைத்து, பத்ரகாளி, காட்டு முனியப்பன், கருப்பணார் போன்ற தெய்வங்களுக்குப் படையலிட்டுப் பூஜை செய்திருந்தால் நல்ல பலன் விளைந்திருக்கும்.


அனைத்திற்கும் மேலாக, கல்லாலும் களிமண்

ணாலும் உலோகங்களாலும் வடித்தெடுக்கப்பட்டவெற்றுச் சிலைகளை, மந்திரம் சொல்லிக் கடவு

ளாக்கும் வேத விற்பன்னர்களைக் கொண்டு,

அந்தப் பழைய பள்ளிக் கட்டடத்தில்சக்தியுள்ள சாமிகளை உலவவிட்டிருந்தால்

பேய்கள் போன இடம் தெரியாமல் ஓடி

மறைந்திருக்கும்.


இப்படியெல்லாம் ஆலோசனை வழங்க ஒரே ஒரு புத்திசாலிகூட

[அடியேனைப் போல] அங்கு இல்லாதது மிகப்

பெரிய சோகம் ஆகும்!


ஹி... ஹி... ஹி!!!


* * * * *

https://www.puthiyathalaimurai.com/india/odisha-train-accident-school-building-where-bodies-were-kept-demolished?utm_source=website&utm_medium=related-stories