பக்கங்கள்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தேசியக் கொடியின் பச்சை நிறத்தை ‘லட்சுமி’ ஆக்கும் ‘ஆர்.எஸ்,எஸ்.’ அரை லூஸு!!!

ம் தேசியக் கொடி, முதலில் காவி நிறமும், பின்னர் வௌ்ளை நிறமும் அதில் நீல நிற அசோகச் சக்கரமும், இறுதியாகப் பச்சை நிறமும் உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“காவி நிறம் பலத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது. வெள்ளை நிறம் உண்மையையும், அமைதியையும் அடையாளப்படுத்துகிறது. அசோகச் சக்கரம், புத்தனின் போதனைகளை நினைவுபடுத்துகிறது. பச்சை நிறம் வளர்ச்சியையும் வேளாண் செழிப்பையும் குறிக்கிறது” என்பது நாட்டு மக்களால் அறியப்பட்டதும் ஏற்கப்பட்டதுமான விளக்கம்.


தேசியக் கொடிக்கான விளக்கம் இவ்வாறிருக்க, 


காவிக்கும்[‘தமசோமா ஜோதிர்கமய’], வெள்ளை நிறத்திற்கும் காமாசோமான்னு புது விளக்கம் தந்தமோகன் பகவத்’ என்னும் ஆர்.எஸ்.எஸ். அரைவேக்காடு[இன்று பெங்களூரில் தேசியக் கொடியை ஏற்றியபோது...] பச்சை நிறத்துக்குத் தந்த விளக்கம்.....



பச்சை நிறத்தை ஸ்ரீ லட்சுமியாகச் சித்திரிப்பது அறிவார்ந்த ஆன்மீகமாகும். இது உயர்ந்த மற்றும் தன்னலமற்ற வலிமையைப் பெற உதவும்” என்பது.


பல மதம் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அல்லாதவர்கள் என்று அனைத்து இந்தியக் குடிமக்களாலும் மதித்துப் போற்றத்தக்கது நம் தேசியக் கொடி.

கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டவர்களும்கூட, லட்சுமி, சரசுவதி, காளி, மூளி எல்லாம் இருப்பதை ஏற்கத் தயங்குவார்கள்.

இந்த ‘ஆர்.எஸ்.எஸ்.’ அசட்டு ஆன்மிகஜீவிக்கு மட்டும் பச்சை நிறம் சரஸ்வதியாகக் காட்சியளித்தது எப்படி?

இந்திய மண்ணில் பிறந்த அனைவருக்கும் பொதுவான ‘இந்தியா’வை, புண்ணிய ‘பாரதம்’ ஆக்கியது[உள்நோக்கம் இல்லையெனின் ஏற்கத்தக்கதே] போதாதென்று, மதிக்கத்தக்க தேசியக் கொடியையும் ஓர் இந்துப் ‘பெண் கடவுளாக’ச் சித்திரிக்க முயல்வது இவரின் குறுமதியைக் காட்டுகிறது.

இனியும் இம்மாதிரியான அற்பத்தனமான செயல்களில் இவரும் இவரைப் போன்ற காவிகளும் ஈடுபடாமலிருப்பது, மக்களின் அமைதியான வாழ்வுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் நன்மை பயப்பதாக அமையும்!