அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 19 ஆகஸ்ட், 2023

கடவுளின் விருப்பம்!? ஒரு திருத்தம்!!

“இறை இல்லங்கள் தாக்கப்படுவதும், சில ஆயுதமேந்திய குழுக்களால்[புத்த மதத்தவர்] புனிதமான இடங்கள்[கிறித்தவ ஆலயங்கள்] அழிக்கப்படுவதும் கடவுளின் விருப்பம் அல்ல என்பதால் இந்த அசம்பாவிதங்கள் பெரிதும் வருத்தம் தருபவை” என்று மனம் நொந்து கூறியிருப்பவர் மியான்மார் கிறிஸ்தவ சபை ஆயர் அவர்கள்.

உலக அமைதிக்காக அயராது பாடுபடும் இவர் இப்படிக் கூறுவதற்குக் காரணமானது எது?

அது ஓர் அசம்பாவிதம், அல்ல, அசம்பாவிதங்கள்.

அவை:

ஆகஸ்ட் 12 சனிக்கிழமையன்று மியான்மரின் கயா மற்றும் சின் மாநிலங்களில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மியான்மார் இராணுவத்தாரின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாயின.

ஆகஸ்ட் 14 அன்று, சின் மாநிலத்தின் தலைநகரான ஹக்காவில் உள்ள மிகப் பெரிய ஆலயம் ஒன்று தாக்கப்பட்டது.

நாட்டின் 16 மறைமாவட்டங்களில் ஐந்து மறைமாவட்டங்களில் பத்திற்கும் மேற்பட்ட ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன.

55க்கும் மேலான கிறித்தவர் கட்டடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைந்துள்ளன.

இதன் விளைவாகக் கிறித்தவர்கள் இடம்பெயர்வதும் நிகழ்ந்துள்ளது[5 கோடியே 40 இலட்சம் மக்களைக் கொண்ட மியான்மரின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 6 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்,  பெரும்பான்மையினர் புத்தமதத்தினர்.

இந்நிலையில், நாம் ஆயர் அவர்களிடம் சொல்லிக்கொள்ள[அவர் கேட்கப்போவதில்லை; இது ஒரு மரபு] விரும்புவது.....

கடவுள்[கள்] ஒருவரோ பலரோ[அந்த ஆய்வு இங்கு அவசியமற்றது] எந்தவொரு கடவுளும் தனக்காகக் கோயில் கட்டி வழிபடுமாறு மனிதர்களிடம் சொன்னதில்லை.

கடவுள் இருப்பதாக நம்பியதன் விளைவாக மனிதர்களால் விருப்பப்பட்டுக் கட்டப்பட்டவை அவை.

அவற்றைப் புனிதமானவை என்று எண்ணிப் போற்றியவர்களும் அவர்களே.

திருடர்கள், கொள்ளையர்கள் போன்றவர்களிடமிருந்து, கோயில்களில் உள்ள மதிப்பு மிக்க சிலைகளையும் பொருட்களையும் பாதுகாப்பவர்களும் அவர்களே.

மியான்மரில் புத்த மதத்தவரால் தாக்கி அழிக்கப்படும் கிறித்தவக் கோயில்களைத் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பது அங்குள்ள கிறித்தவர்களின் கடமை.

மியான்மரில் அவர்கள் சிறுபான்மையினர் என்பதால், புத்த மத வெறியர்களை எதிர்த்துப் போராடுவது வெற்றியைத் தராது.

இந்நிலையில், சிறுபான்மைக் கிறித்தவர்களுக்கு ஆதரவாக உலகெங்கிலுமுள்ள கிறித்தவர்கள் ஒருங்கிணைந்து, உலக அளவில் சிறுபான்மையினராக உள்ள புத்த மதத்தவரின் கோயில்களைத் தாக்கி உருக்குலைத்தல் வேண்டும்.

அவ்வாறு செய்தால் மியான்மார் புத்தமதத்தவரின் கொட்டம் முற்றிலுமாய் அடங்கிவிடும்.

கடவுள் எங்கிருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அற்பப் பிறவிகளான மனிதர்களுக்குத் தெரியாது.

ஆகவே.....

புனிதமான இறை இல்லங்கள் தாக்கப்படுவதைக் கடவுள் விரும்பமாட்டார்[புத்த மதத்துக்காரன், “எங்கள் புத்த பகவான் இதை விரும்புகிறார்” என்று சொல்லுவான்] என்று சொல்லிக் காலம் தாழ்த்தாமல் புத்த வெறியர்களுக்குப்[புத்தர் வகுத்த நெறியைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் இவர்கள்] பதிலடி கொடுப்பதே வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

சுருங்கச் சொன்னால்.....

‘அடிக்கு அடி! உதைக்கு உதை!!’ என்பதே, மனிதர்களைப் பொருத்தவரை, எதிரியை எதிர்கொண்டு திருத்துவதற்கான, அல்லது அழிப்பதற்கான ஒரே வழி!

கடவுளைத் துணைக்கு அழைப்பதால் எந்தவொரு பயனும் இல்லை!!

இது மனித வரலாறு கற்றுத்தரும் பாடம்!!!

* * * * *

https://www.vaticannews.va/ta/church/news/2023-08/myanmar-t-christian-churches-hit-by-the-army-in-kayah-and-ch.html