வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

ஆணுறுப்பில் ‘எலும்பு முறிவு’ சாத்தியமா?

ண்மையில், முதலிரவின்போது ஆண்மகனின்[கணவன்] ஆண் உறுப்பின் எலும்பு உடைந்ததால், மனமுடைந்த அவனும் அவன் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு பற்றி[ஊடகங்கள் வாயிலாக]ப் பலரும் அறிந்திருத்தல்கூடும்.

உண்மையில் ஆணுறுப்பில் எலும்பு இல்லை என்று உடலியல் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, இவ்வுறுப்பில் எலும்பு முறிவதற்கான வாய்ப்பே இல்லை.

தவறான உடலுறவு முறையால் உறுப்பில் சிதைவு நேர்கிறது என்பது அறியத்தக்கது.

அதென்ன ‘சிதைவு’?

ஆணுறுப்பின் தோல் பகுதிக்குக் கீழே ரப்பர் போன்ற ‘திசு அடுக்கு’ உள்ளது. இது "துனிகா அல்புகினியா"[துனிகா அல்புஜினியா என்பது ஆண்குறியின் நீளத்தை நீட்டிக்கும் நார்ச்சத்து உறை ஆகும். இது ஒரு இரு அடுக்கு அமைப்பாகும், இதில் வெளிப்புற நீளமான அடுக்கு மற்றும் உள் வட்ட அடுக்கு ஆகியவை அடங்கும்... It is a bi-layered structure that includes an outer longitudinal layer and an inner circular layer] எனப்படும். இதுதான் உடலுறவுன்போது ஆணின் ஆணுறுப்பு அளவு அதிகரிக்கவும் குறையவும் காரணமாக அமைந்துள்ளது.

ஆணுறுப்பின் ‘திசு முறிவு’அறிகுறிகளாவன:

*ஆணுறுப்பில் சத்தம்.

*விறைப்புத்தன்மை குறைதல்

*உறுப்பில் கடுமையான வலி.

*ஆணுறுப்பில் நீல நிறமும் கறுப்பு நிறமும் தோன்றுதல்.

*எதிர்பாராத வகையில் ரத்தப்போக்கு ஏற்படுதல்.

*சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாதல்.

சிதைவைக் கண்டறிவது எப்படி?

சிறுநீர்க்குழாய் செயல்பாடு குறித்துக் கண்டறியச் ‘சிறுநீர்ப் பரிசோதனை’யும், ஆணுறுப்பில் சிதைவு ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கச் ‘சிறப்பு வகை எக்ஸ்ரே’வும், ஆண்குறியில் அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ உள்ளிட்ட சோதனைகளும் செய்தல் வேண்டும்.

***இத்தகவல்கள், ஆணுறுப்புச் சிதைவு பற்றி எச்சரிப்பதற்காக மட்டுமே. அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுதல் வேண்டும்.

* * * * *

https://www.indiaglitz.com/is-it-possible-to-have-a-penis-break-during-intercourse--news-292253