செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது "கடவுளுடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்றும், சமூகத்திற்கு இதனால் அபாயங்கள் விளையும்" என்று இங்கிலாந்தில் சிலர் கவலை தெரிவித்திருக்கிறார்களாம். தேவாலயத்தின் முன்னாள் தலைவர் ஒருவர்[‘வெரி ரெவ் ஆல்பர்ட்’], அவர்களைத் தேற்றும் வகையில் செய்த அறிவிப்புகளை http://www.telegraph.co.uk/ என்னும் தளம் வெளியிட்டிருக்கிறது.
மேலும், “செயற்கை நுண்ணறிவுக்கு(AI) எவரும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், அது கடவுளுடன் பேச முடியாது” என்றும் கூறி அவர் கிறிஸ்துவர்களை ஆற்றுப்படுத்தினார்.
திருச்சபையின் மாத இதழில், "வழிபாடு நிகழ்த்துவதற்கான மனமோ, அதற்கான பரிசுத்த ஆவியின் உறுதுணையோ ‘செ.நு. அறிவு’க்கு இல்லை” என்று எழுதினார்.
இங்கே நம்மை வியப்பில் ஆழ்த்துவது, செயற்கை நுண்ணறிவுக்கு உயிர், மனம், புத்திசாலித்தனம் ஆகியவை இல்லாததால் அதனால் கடவுளுடன் பேசுவது சாத்தியப்படாது என்று கூறியிருப்பதுதான்.
*‘செ.நா.நுண்ணறிவு’ கடவுளுடன் பேசுவது உண்மையாக இருந்தால், அதனால் மனித இனத்துக்குப் பலவகை நன்மைகள் ஏற்படுமே தவிர, எவ்வகையில் தீங்கு நேரிடும் என்பது நமக்குப் புரியவில்லை.
*கடவுளின் பெயரால் மதவாதிகள், எப்படியெல்லாம் மக்கள் மீது மூடநம்பிக்கைகளைத் திணிக்கிறார்கள் என்பதை அது கடவுளிடம் சொல்லிவிடுமா?
*அதற்குச் சுயமாகச் சிந்திக்கும் அறிவு இருந்தால், கடவுள் இருப்பதாக மதவாதிகள் சொல்வது வெறும் கற்பனை என்னும் உண்மையைப் போட்டு உடைத்துவிடுமா?
*நாத்திகர்களுடன் சேர்ந்துகொண்டு, “கடவுள் இல்லை; இல்லவே இல்லை. கடவுள் நம்பிக்கையைப் பரப்புகிறவன் முட்டாள்; நம்புகிறவன் அடிமுட்டாள் என்று பரப்புரை செய்யுமா?
நமக்கான மேற்கண்ட ஐயங்களை மதவாதிகள் போக்குவார்களா?
ஊஹூம்!
வளர்க செயற்கை நுண்ணறிவு! ஒழிக செயற்கையாக உருவாக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை!!
* * * * *
]
https://cloud.google.com/learn/what-is-artificial-intelligence