“சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற உதயநிதி ஸ்டாலின் பேச்சு சனாதன ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் விவாதத்தையும், அநாகரிகமான தாக்குதல் போக்கையும் வளர்த்திருக்கிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் பேசுவதற்கு முன்னால் உதயநிதி கிஞ்சித்தேனும் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருக்கலாம். ஆனால்.....
அதைக் கட்டிக் காப்பதோடு, அந்த நெறியைப் பரப்புரை செய்யும் சனாதனிகள் இருக்கும்வரை அதை ஒழிப்பது இயலவே இயலாது என்பதை எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டார் உதயநிதி.
சாதி வேறுபாடுகளையும், வேறு வகை சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கிய சனாதனிகளை ஒழித்துக்கட்ட முடியுமா என்றும் ஆராய்ந்திருக்க வேண்டும்.
இப்போதைக்கு அது சாத்தியப்படாது என்றாலும், எதிர்காலத்திலேனும் அது சாத்தியம் ஆகும் வகையில், “சனாதனிகளை ஒழிக்க வேண்டும்” என்று பேசி[வெறும் வாய்ச் சவடால்தான்] மக்களின் உணர்ச்சியைத் தூண்டியிருக்கலாம்.
அவர் அதைச் செய்யவில்லை.
நடுவணரசு தன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று அஞ்சியிருக்கிறார் உதயநிதி.
அப்படி அஞ்சுவது அர்த்தமற்றது என்பதை, வடநாட்டுச் சாமியார்[உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா] இவருடைய[உதயநிதி] தலையை வெட்டிவந்தால் 10 கோடி பரிசளிப்பதாக அறிவித்த நிலையில், அந்த அழுக்குப் பிண்டத்தின் மீது ஆளும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததிலிருந்து[தமிழ்நாட்டில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது] இப்போது புரிந்துகொண்டிருப்பார் அமைச்சர்.
ஏற்ற பின்னர்.....
“முதலில் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் சனாதனிகள். இவர்கள் ஒழிந்தால் சனாதனமும் ஒழிந்துவிடும்” என்று மேடைகளில் முழக்கமிடலாம்.
சனாதனிகளின் “வெட்டுவோம்... குத்துவோம்” போன்ற திமிர்ப் பேச்சு தொடருமேயானால், உதயநிதி இதைச் செய்யக்கூடும்!