மனித உடலில் புற்றுநோய் தாக்காத உறுப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூளை, கண்கள், மூக்கு பல் எயிறு, கழுத்து, நுரையீரல், இதயம், இரைப்பை, குடல், சிறுநீரகம், பிராஸ்டேட் சுரப்பி, பிறப்புறுப்பு, மலக்குடல் முதலானவற்றை அது பாதிக்கிறது.
இணையத்தில் உலாவியபோது, சுவையுணர் உறுப்பான நாக்கைத் தாக்கும் ‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’['Oral squamous cell carcinoma']பற்றி அறிய முடிந்தது.
இதன் மூலம் மனதில் அச்சம் பரவியது என்றாலும், தன்னைப் பாதித்த நாக்குப் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்ற ஒரு மாடல் அழகியின் புகைப்படத்தைப் பார்த்தபோது உடம்பு சிறிது நேரம் நடு நடுங்கியது.
மிக மென்மையான மனம் படைத்தவர்கள் அவளின் அழகு முகத்தை ரசிப்பதைத் தவிர்த்து, இந்நோய் குறித்த குறிப்புரைகளை மட்டும் வாசிப்பது அவர்களின் மனநலம் காக்க உதவும்.
* * * * *
45 வயதான எல்லி பிரவுன் ஹென்டர்சன்[மாடல் அழகி], நெவாடாவைச் சேர்ந்தவர்,
வழக்கமான உடல் பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றபோது, இவருக்கு ‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’ இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், நாக்கிலிருந்த கட்டியோடு சேர்த்து இவரது நாக்கின் ஒரு சிறிய பகுதி துண்டிக்கப்பட்டது.
ஆனால், ஓர் ஆண்டு கழித்து அவளின் காதில் 'தாங்க முடியாத' வலி உண்டானது.
பரிசோதித்த மருத்துவர், ‘நாக்குப் புற்றுநோய்’[‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’] மீண்டும் தாக்கியிருப்தாகவும், அது மூன்றாம் நிலையில் இருப்பதாகவும், அதாவது, அது அவளுடைய நிணநீர் முனைகளுக்குப் பரவியுள்ளதாகவும் தெரிவித்தார்; அறுவைச் சிகிச்சையின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
அறுவை மருத்துவர்கள் அவள் நாக்கின் பாதியையும் தாடையின் ஒரு பகுதியையும் இரு கூறுகளாக்கி, உரிய சிகிச்சைக்குப் பிறகு, திசுக்கள் மற்றும் எலும்பைப் பயன்படுத்தி அவற்றை ஒட்டினார்கள். இதனால், அவள் முகம் வீங்கியது என்றாலும் பின்னர் இயல்புநிலைக்குத் திரும்பினார்[She was sent for a 12-hour procedure where doctors cut out half her tongue and part of her jaw before rebuilding them using tissue and bone from her leg — an operation which caused her face to swell].