எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 5 நவம்பர், 2023

‘ஹலால்’...மந்திரம் ஓதுதலும் ஆசீர்வதித்துக் கொல்லுதலும்!!!

ஹலால் முறையில் விலங்குகளை வெட்டுவதற்கு முன்பாக இஸ்லாமிய மதச் சடங்கை அறிந்த இஸ்லாமியர் ஒருவர், தங்கள் மத நூலான குர் ஆனில் விலங்குகளைப் பலியிடுவதற்கு முன்பாகக் கூறப்படும் பிரார்த்தனை மந்திரத்தை ஓதி, அவ்விலங்கை இறைவனின் பெயரால் ஆசிர்வதிப்பார்{‘ஹலால்’ என்பதன் பொருள்[Halal... ‘ஹலால்’ என்பது அரபு மொழி வார்த்தையாகும்]. இஸ்லாமிய மத நூலான “குர்ஆன் அனுமதிக்கின்ற முறை” என்கிறார்கள் இஸ்லாமியர்கள்}.

அவர் ஆசி வழங்கி முடித்ததும், கசாப்புக் கடைக்காரர் அந்தக் கால்நடையின் கழுத்தை மிகக் கூர்மையான ஆயுதத்தால். அது வலியை உணராதவாறு[???] அறுப்பார்…..[https://dheivegam.com/halal-meaning-in-tamil/].

இதன் மூலம்.....

உயிர்களைக் கொல்லும்போது, கொல்லுபவர் மனதில் கருணை பொங்கி வழிய அதைச் செய்கிறார் என்பதை அறிகிறோம்.

ஆக, இஸ்லாமியர்கள், பிரார்த்தனை மந்திரம் ஓதிக் கொல்லும் முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பது பெரிதும் போற்றுதற்குரியதாகும்.

விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடும்போது பிரார்த்தனை மந்திரம் சொல்ல வாய்ப்பில்லாததால் அவர்கள் அதைச் செய்வதில்லை என்று நம்பலாம்[?].

மேலும், எதிரிகளுடன் போரிட நேரும்போது இவர்களால் கொல்லப்படும் மனிதர்கள், இவர்கள் ஆறறிவாளர்கள் என்பதால், பிரார்த்தனை மந்திரம் சொல்லாமல் கொல்லப்படும் உயிரினங்களைவிடவும்[விலங்குகள், பறவைகள்] அதிக அளவில் வேதனையை அனுபவிப்பார்கள் என்பதால், கல்லால் அடித்தோ, துப்பாக்கியால் சுட்டோ, குண்டுகளை வெடித்தோ, ஏவுகணைகளை வீசியோ எதிரிகளைக் கொல்லும்போதும் பிரார்த்தனை மந்திரம் ஓதுவார்கள் என்று நம்பலாம்[ஒரு நம்பிக்கைதான். ஆதாரம் ஏதும் கைவசம் இல்லை].

இது பாராட்டுக்குரிய உயர் பண்பு என்பதால், பிற மதத்தவரும் தத்தம் எதிரிகளோடு மோதும்போதெல்லாம்[கலவரம் & போர் நிகழ்வுகள்] அருளுள்ளத்துடன் ‘பிரார்த்தனை மந்திரம் ஓதுதல்’ நெறியைத் தவறாமல் பின்பற்றுதல் வேண்டும் என்பது நம் பரிந்துரை.

* * * * *