பக்கங்கள்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

கி.பி.2100இல் மனிதர் ஆயுள்[122 ஆண்டுகள்]! அயோக்கியர் எண்ணிக்கை?!

2023ஆம் ஆண்டில், உலகளாவிய ஆயுட்காலம் ஆண்களுக்கு 70.8 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 76 ஆண்டுகள், உலகளவில் சராசரியாக 73.4 ஆண்டுகள்[©தி டெய்லி டைஜஸ்ட்].

மனிதர்கள் 1850இல் வாழ்ந்ததைவிட 30 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார்கள்.

அதாவது, இரண்டு நூற்றாண்டுகளுக்குள் மனிதர்களின் ஆயுள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது,

மனிதர்கள் 80 வயதை எட்டுவதும், சில சமயங்களில் 90 வயதைத் தொட்டுக் கடப்பதும்கூடச் சாதாரணம் ஆகிவிட்டது.

  
இந்தோனேசியரான Mbah Gotho, என்பவர் 1870இல் பிறந்து 2017இல் இறந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு[146 ஆண்டுகள்] வாழ்ந்து அதிசயம் நிகழ்த்தினார்.

இன்றளவில் நமக்குள் எழும் கேள்வி.....

2100 இல் நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்வோம்?

“நாம் 122க்கும் அதிகமான வயதை எட்டுவோம்!” என்கிறார்கள் ஆய்வாளர்கள்[வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு; அமெரிக்கா, கனடா, ஜப்பான் & 10 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்நாளை அடிப்படியாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டது; இந்த நாடுகளில் வயது 110ஐத் தாண்டியவர்கள் 350-400 பேர் உள்ளனர்].

மனிதர்களின் ஆயுட்காலம் 122ஆக உயரும் என்னும் ஆய்வு முடிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கும்தான்.

ஆனால்.....

மனிதர்களின் வாழ்நாள் எண்ணிக்கை 122 ஆண்டுகளாக உயரும் அதே வேளையில், அவர்களில் அயோக்கியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்குமா?

“ஆம்” என்றால், அந்த அதிகரிப்பு மிகவும் ஆபத்தானது; இப்போதுள்ள மன அமைதியும் பறிபோகும் என்பது உறுதி.

நூற்றிருபத்தியிரண்டோ நூறோ, ஆயுட்கால அதிகரிப்பு ஒரு பொருட்டல்ல; 100க்குச் சற்றே குறைந்தாலும் சூதுவாதில்லாமல், குற்றங்கள் புரியாமல், உத்தமக் குணத்தவராக, அனைவரும் ஒத்த மனதுடன் வாழ்ந்து முடிப்பதே பெரிதும் விரும்பத்தக்கது ஆகும்.

                                           *   *   *   *   *

In 2100, humans will live much longer than expected (msn.com)