எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 15 ஜனவரி, 2024

அமேசான் கிண்டிலில் என் 49ஆவது நூல்[புத்தம் புதுசு]!!!

மேசான் கிண்டிலில் நேற்று முன்தினம்[13.01.2024] வெளியான, ‘ஊரூருக்குக் கோயில்! உருப்படுமா மனித இனம்?’ என்னும் என் நூலில்[கீழ்க்காண்பது] 09 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அத்தனையும் தங்கத் தகடுகளில் பொறித்து வைக்கத்தக்க தரமான ஆய்வுரைகள்[ஹி... ஹி... ஹி!!!]!

மட்டுமல்லாமல், உங்கள் மனதின் அடியாழத்தில் வேரூன்றியிருக்கும் கடவுள் மீதான மூடநம்பிக்கையை அடியோடு பெயர்த்தெடுக்கும் திறன் பெற்றவை. 

கட்டுரைகளில் சிலவற்றையோ, அனைத்தையுமோ ஏற்கனவே வாசித்து[‘கடவுளின் கடவுள்!!!’ தளத்தில்] மனம்போன போக்கில் என்னை வைதுகொண்டிருப்பினும், மீண்டும் மீண்டும் வாசித்தால்[கிண்டில் சந்தாதாரராயின்] என்னை மனதாரப் பாராட்டுவீர்கள்.

நீங்கள் வாசிக்க விரும்பவில்லை எனின்,  அதி புத்திசாலிகள் என்று நீங்கள் நம்புகிற உங்களின் நண்பர்களிடம்[ஹி... ஹி... ஹி!!!] பரிந்துரை செய்யலாம்.