புதன், 17 ஜனவரி, 2024

வள்ளுவருக்குக் ‘காவி ஆடை’! கழிசடைக்கு ஸ்டாலின் கொடுத்தது பதிலடியா?!

ன் தாய்மொழியான ‘தமிழ்’ என்னும் பெயரையோ, தன் இனத்தையோ[தமிழினம்], தன்னைப் பற்றியோ[குறைந்த பட்சம் பெயர்கூட இல்லை] தன் நூலில்[திருக்குறள்] குறிப்பிடாத, ‘பொதுமை’ போற்றும் திருவள்ளுவருக்கு, நெற்றி நிறையப் பட்டை போட்டு, காவி ஆடை அணிவித்துப் பொங்கல் வாழ்த்தும் தெரிவித்திருக்கிறது ஒரு ‘கழிசடை’. 

அதன் பெயரையோ பதவியையோ இங்குக் குறிப்பிடுவதுகூட நம்மை நாமே அவமானப்படுத்தும் இழிசெயலாகும்.

வெறும் வாய்ப்பந்தல் போட்டு[தமிழ் வளர்ச்சிக்கென்று பயன்தரும் வகையில் எதுவும் செய்வதில்லை] வரும் தேர்தலில் தமிழர் வாக்குகளை அறுவடை செய்ய அயராமல் பாடுபடுவோரின் கைக்கூலியான இந்த நபருக்குப் பதில் அளிக்கும் வகையில், ஏதோ சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இவர் சொன்னதை, ‘அவருக்கு ஸ்டாலின் தந்த பதிலடி’ என்னும் தலைப்பில் செய்தியாக வெளியிட்டுள்ளன ஊடகங்கள்.

‘தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து[தொடக்கம்]..... தமிழ்நாட்டில் யாரும் வள்ளுவரைக் கறைபடுத்த முடியாது[முடிவு]’ என்பதே அந்தப் பதிலடி.

இதற்குப் பெயர் பதிலடியா?[பதில்+அடி?]

இந்த வெற்று வாய்ச்சொல்லடி ‘நாட்டை ஆளும் அதிகாரக் கும்பலின் தூண்டுதலில் மனம்போனபடி இங்கே கூத்தடித்துக் கொட்டமடிக்கும் இந்தக் கோமாளியைக் கொஞ்சமும் திருத்தாது.

முதல்வர் ஸ்டாலினுக்கும் இது தெரியும்.

தெரிந்திருத்தும் பதிலடி என்னும் பெயரில் அறிக்கை வெளியிடுவது ஸ்டாலின் தரப்பினருக்குக் கொஞ்சம் ஆறுதல் தருமே தவிர, தமிழுக்கோ தமிழ்நாடு மக்களுக்கோ எந்தவொரு பயனுமில்லை.