அதனால்தான் அவர்கள் திருப்பதி போகிறார்கள். மணிக்கணக்கில் காத்திருந்து திருப்பதி சாமியைத் தரிசிக்கிறர்கள்; உண்டியலில் தவறாமல் காணிக்கை செலுத்துகிறார்கள்.
பக்தர்கள் அனைவருக்குமான மனக்குறை என்னவென்றால்.....
இலவசத் தரிசனமோ, லஞ்சம் கொடுத்துச் செய்யும் சிறப்புத் தரிசனமோ, எட்ட நின்று சில வினாடிகள் மட்டுமே திருவேங்கடவனைத் தரிசிக்க முடியும் என்பதுதான்.
விதிவிலக்காக, இரண்டே இரண்டு அதிர்ஷ்டக்காரப் பக்தர்கள் மட்டும் ஐயனின் அருகில் சென்று ஆர அமறத் தரிசனம் செய்து பேரானந்தத்தில் திளைக்கலாமாம்.
அதென்ன அதிர்ஷ்டம்?
உண்டியல் நிறைந்ததும், அதற்குச் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும்போது, அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கிற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்களாம் ஊழியர்கள்.
“இந்த உண்டியல் நிரம்பிவிட்டது. இதைக் கச்சிதமாகச் சீல் செய்து எடுத்துச் செல்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம்" என்று அந்த இரண்டு பக்தர்களும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும்.
இப்படி, சாட்சிக் கையெழுத்துப் போட்ட இரண்டு நபர்களும் மீண்டும் ஒருமுறை[ஏற்கனவே எட்ட நின்று தரிசனம் முடித்துத்தான் உண்டியலில் காணிக்கை செலுத்தப் போகிறார்கள்] ஏழுமலையானை ஆசை தீர இலவசமாகத் தரிசனம் செய்யலாம்; வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள் ஊழியர்கள்.
இந்த அரிய வாய்ப்பு, காவாளம் உண்டியல் நிரம்பும்போது அதன் அருகில் நிற்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால்தான் இதற்குத் தேவை அதிர்ஷ்டம் என்கிறார்களாம்.
எந்தவித முயற்சியும் இல்லாமல் நாம் விரும்புவதைப் பெறுவது அதிர்ஷ்டம் ஆகும்.
அதிர்ஷ்டத்திற்கு முயற்சி தேவையில்லைதான். ஆனாலும், ஏழுமலையான் கருணை காட்டினால் அந்த அதிர்ஷ்டத்தைப் பெற முடியாதா என்ன?
“உண்டியலை நான் நெருங்கும்போது, அது நிரம்பி வழிய அருள்பாலிப்பாய் எம்பெருமாளே” என்று தினந்தோறும் ஏழுமலையானை வேண்டிக்கொள்ளுங்கள்.
நீங்கள் அதிர்ஷ்டசாலி ஆவீர்கள்! ஹி... ஹி... ஹி!!!
* * * * *