இந்துக்கள் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக ராம ஜென்மபூமியான அயோத்தியைக் கருதுகின்றனர். பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் பல இந்து மன்னர்கள் இராம ஜென்ம பூமியில் உள்ள இராமர் கோயிலைப் பலமுறை மறுசீரமைப்புச் செய்து கட்டியுள்ளனர்.
பொ.ஊ. 1528-இல் இராம ஜென்மபூமியில் இருந்த கோயிலை, பாபரின் படைத்தலைவர் இடித்து, அச்சிதிலங்கள் மீது பாபர் மசூதி கட்டினார்.
இராம ஜென்மபூமியில் மீண்டும் இராமர் கோயிலைக் கட்ட இந்துக்கள் பலமுறை முயன்றனர்[தோற்றனர்].
1992இல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் மீண்டும் ராம ஜென்மபூமியில் தற்காலிகமாக[நீதிமன்றத் தீர்ப்பின்படி]க் குழந்தை இராமர் சிலை நிறுவப்பட்டது.
சொத்து தொடர்பான சட்டத் தகராறு இந்திய உச்ச நீதிமன்றத்தை எட்டியது. 9 நவம்பர் 2019 அன்று, உச்ச நீதிமன்றம் இந்துக் கட்சிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து நிலத்தை அவர்களிடம் வழங்க உத்தரவிட்டது. நிலம் அவர்களின் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. [https://en.wikipedia.org/wiki/Ram_Janmabhoomi]
மேற்கண்டவை கடந்த கால நிகழ்வுகள்.
அந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் தலைமையில் குழந்தை ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு[ஒரு பகுதி] 22.01.2024இல் திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது.
இரு மதத்தவருக்கு இடையேயான இந்த மோதல் போக்கு முற்றுப்பெற்றுவிட்டதா, அல்லது, இனியும் தொடர வாய்ப்புள்ளதா?
1528இல்தான் ராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. இது நிகழ்ந்தபோது இங்கு நடைபெற்றது இஸ்லாம் மன்னர்களின் ஆட்சி என்பது நினைவுகூரத்தக்கது.
பெரும் போர்களுக்குப் பின்னர், இஸ்ஸாம் மன்னர்கள் அன்று இந்த நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள்[இந்து மன்னர்களே பெரும்பான்மையினராக இருந்தும்கூட]. அதைப் போன்றதொரு சூழல்[இந்தியும் இந்துத்துவமும் திணிக்கப்பட்டு இந்தியா உடைந்து சிதறுதல்] உருவானால் மீண்டும் அவர்கள் இந்த நாட்டின் பெரும் நிலப்பரப்பை ஆட்சிபுரியலாம்தானே?
அது நேரும்போது, அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்பட்டு, அங்கே பாபர் மசூதி கட்டப்படலாம்.
பின்னர் ஒரு காலக்கட்டத்தில், இந்துமதவாதிகளிடம் புத்துணர்ச்சியும் புது எழுச்சியும் ஏற்பட்டால், இஸ்லாமியரிடமிருந்து இந்த நாட்டை விடுவிப்பதோடு, அயோத்தியிலுள்ள மசூதியை இடித்து அங்கே ராமருக்குக் கோயில் கட்டுவார்கள்.
இத்துடன் இவர்களின் தொடர் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி விழுமா?
“விழும்” என்று உறுதிபடச் சொல்ல இயலாது.
மோதல்கள் தொடர்கதையானால்.....
காலமெல்லாம், ராமர் கோயில் இடிக்கப்படுவதும் மசூதி இடிக்கப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
விளங்கச் சொன்னால்.....
இந்த மண்ணில் மதங்கள் இருக்கும்வரை, அதை வெறித்தனமாகப் பின்பற்றும் வெறியர்கள் உள்ளவரை.....
மோதல்கள் தவிர்க்கப்பட்டு, ‘அனைவரும் மனிதர்களே, நமக்குத் தேவை மனிதாபிமானமே, மதங்கள் அல்ல’ என்பதை உணர்ந்து, ஒன்றுபட்டு அமைதியாக வாழும் நிலை உருவாகாது.
ஆகவே, கூட்டிக்கழித்து நாம் வலியுறுத்த விரும்பவது.....
“அனைவரும் முழு மனிதர்களாகவே வாழ்வோம்; மதங்கள் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்”[மதங்களால் விளையும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம்] என்பதே!
ஒழிக மதங்கள்! வாழ்க... வளர்க மனித நேயம்!!