கடந்த 22ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், அந்தக் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தின் அனுமதியைப் பெறாமல், இந்து அமைப்பினர் 108 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் அனுமன் கொடி ஏற்றினர்.
அதே கிராமத்தை சேர்ந்த சிலர், “அரசு இடத்தில் தேசியக் கொடி, கன்னட கொடி ஆகியவை தவிர வேறு கொடிகளை ஏற்ற அனுமதி இல்லை என்பதால். அதை அகற்ற வேண்டும்” என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவரிடமும் மண்டியா மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்ததால், அதிகாரிகள் அந்தக் கொடியை அகற்றி, தேசியக் கொடியை ஏற்றினார்கள்.
இதன் விளைவாக, சங்கிகள்[பாஜக, பஜ்ரங்] மாநிலமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது செய்தி[https://www.hindutamil.in/news/india/1190955-tension-over-removal-of-hanuman-flag-cm-siddaramaiah-accuses-bjp-jds-1.html].
‘பாஜக’ பன்னாடைகளுக்கு, மத்தியில் தங்களின் கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்னும் திமிர் ஒருபுறம். நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காத ஆணவம் மற்றொரு புறம்.
இந்த இரண்டைவிடவும், இவர்களின் மண்டை முழுவதும் மூளைக்குப் பதிலாகக் களிமண் மட்டுமே உள்ளது என்பது அறியத்தக்கது.
கொஞ்சமேனும் மூளை இருந்திருந்தால்.....
ஊரூருக்குக்கு அதுக்குக் கோயில் எழுப்பிக் கொண்டாடுவதை வழக்கம் ஆக்கியிருக்கமாட்டார்கள்.
இவர்களை இப்படியான ஜத்துக்களாக ஆக்கியவர்கள் நாட்டை ஆளும் ‘பாஜக’ தலைவர்களே என்பதால், அவர்கள் இவர்களுக்குப் புத்தி சொல்லித் திருத்த முயன்றதில்லை.
பக்தியின் பெயரால் மூடர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி, அவர்களின் அமோக ஆதரவால், தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்த அவர்கள் அடுத்துவரும் தேர்தலிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புகிறார்கள்.
இவர்களின் நம்பிக்கை பலிக்காமலிருக்க, நாட்டு நலனில் அக்கறையுள்ள கட்சிகளும் சீரிய சிந்தனையாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, குரங்கைக் கடவுளாக்கி வழிபடும் முட்டாள்கள் எண்ணிக்கை நாளும் அதிகரிப்பதைத் தடுப்பதோடு, இருப்பவர்களைத் திருத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுதல் வேண்டும்.
தவறினால்......
இந்தியா ஆறறிவு மனிதர்களுக்கான நாடாக இல்லாமல், பெருமளவில் ஐந்தறிவுக் குரங்குகள்[முழு மூடர்கள் வாழும் நாடு] உலவும் நாடாக மாறும். இந்தியா என்னும் பெயர் ‘ராம ராஜ்ஜியம்’ என்றோ, ‘அனுமன் ராஜ்ஜியம்’ என்றோ மாறும்.
மாறுவதோடு.....
அடுத்துவரும் கொஞ்சம் ஆண்டுகளில், பெருமளவில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறும்!